பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 55

நிறுத்தினால், தாங்கள் இருவரும் இப்போது கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவரைக் கொண்டே சமாதானம் சொல்விக்கிறேன்” என்றார்.

அவர் அவ்வாறு கேட்பாரென்று எவரும் எதிர்பார்க்க வில்லை. ஆதலால், அது நியாயாதிபதிக்கும், மற்ற எல்லோருக்கும் நிரம்பவும் அதிசயமாகத் தோன்றியது. அவர் பைத்தியங் கொண்ட மனிதராகத்தான் இருக்க வேண்டுமென்று எல்லோரும் தீர்மானித்துக் கொண்டதன்றி அவர் மேலப்பண்ணை முதலி யாரிடம் என்னதான் கேட்கப் போகிறாரென்பதை அறிய ஆவல் கொண்டு சந்தடி செய்யாமல் கவனித்துக் கொண்டிருந்தனர். நீதிபதியின் உத்தரவின்மேல் சேவகன் மறுபடி மேலப்பண்ணை முதலியாரை அழைத்து அவரை சாட்சிக் கூண்டின்மேல் நிற்க வைத்தான். முதலியாரும் பெரிதும் வியப்பும் பிரமிப்பும் அடைந்து அந்தச் சாமியார் தம்மிடம் என்ன விபரீதமான கேள்வியைக் கேட்பாரோ என்று அஞ்சிக் கலங்கி மிகுந்த கலவரத்தோடு அவரது முகத்தைப் பார்த்தார்.

திவான் சாமியார் அவரைப் பார்த்து, ‘முதலியார் ஐயா! நான் தங்களிடத்திலும், தங்கள் சம்சாரத்தினிடத்திலும் மரியாதைக் குறைவான வார்த்தைகளை உபயோகித்துத் துரவித்துவிட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்கள் என்மேல் குற்றம் சுமத்து கிறார்கள். அதைத் தாங்கள் எவ்விதமாக எண்ணுகிறீர்களோ என்னவோ தெரியவில்லை. தங்களிடம் இப்போது லக்ஷம் ரூபாய் பெறுமானமுடைய நிலம் இருக்கிறதல்லவா?’ என்றார்.

சாட்சி, ‘ஆம். என்னுடைய நிலம் இப்போது லக்ஷம் ரூபாய் பெறும்’ என்றார்.

திவான் சாமியார், தாங்கள் இந்த அம்மாளைக் கலியாணம் செய்து கொண்ட காலத்தில் தங்களிடம் எவ்வளவு சொத்திருந் தது?’ என்றார்.

சாட்சி, ‘குறைவாகத்தான் இருந்தது” என்றார்.

திவான் சாமியார், ‘குறைவாக இருந்ததென்றால், இவ்வளவு தான் என்று குறிப்பாகச் சொல்ல முடியாதா?’ என்றார்.