பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செளந்தர கோகிலம்

சாட்சி, ‘அவ்வளவு காலத்துக்கு முந்திய நிலைமையைப் புள்ளி விவரங்களுடன் சொல்ல, எனக்கு அவ்வளவு ஞாபகம் இல்லை?” என்றார்.

திவான் சாமியார், “அவ்வளவு காலமென்றால் அதிகமிராது போலிருக்கிறதே. உங்களுக்குக் கலியாணம் சுமார் ஏழு வருஷ காலத்திற்குள்தானே நடந்திருக்க வேண்டும். அப்போதைய சங்கதி நினைவுக்கு வரவில்லையா?” என்றார்.

அதைக் கேட்ட சாட்சி, திடுக்கிட்டுத் திகைத்துப் போனார். யாரோ அன்னியர்போலக் காணப்பட்ட ஒரு பரதேசி தமக்குக் கலியாணமான விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாரே என்று நினைத்து ஆச்சரியமடைந்தவராய், “ஆம், எனக்கு நினைவு உண்டாகவில்லை” என்றனர்.

திவான் சாமியார், ‘உங்களுக்கு நினைவு உண்டாக வில்லையா? அப்படியானால் நான் சொல்லுகிறேன். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அந்தக் காலத்தில் உங்களுக்கு இருந்த நிலம் சுமார் எழுநூறு எண்ணுறு ரூபாய் பெறும். அதையும் உங்கள் முன்னோர்கள் முன்னுாறு ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தார்கள். அப்போது நீங்கள் சுயமாக நானுறு ரூபாய் சம்பாதித்து வைத்துக் கொண்டிருந்தீர்கள். பிறகு ஒரிடத்திலிருந்து நாலாயிரத்து நானூறு ரூபாய் உங்களுக்குச் சன்மானம் கிடைத்தது. கலியாணத்துக்கு முன் உங்கள் பெறுமானம் இவ்வளவுதானென்று நினைக்கிறேன்” என்றார்.

சாட்சியின் வாயிலிருந்து, “ஆம்” என்ற சொல் அவரையன்றி வெளிப்பட்டது. அதைக்கேட்ட ஜனங்களெல்லோரும், தங்கள் ஊர் மேலப்பண்ணை முதலியாரை வேண்டுமென்றே அந்தப் பரதேசி அவமானப்படுத்துகிறார் என்று நினைத்துக் கட்டிலடங்கா ஆவேசமும் பதைபதைப்பும் அடைந்து கோர்ட்டிலேயே அவரை அடித்துக் கொன்று போட்டுவிட வேண்டுமென்ற துணிவைக் கொண்டவர்களாய் நெருங்கினார்கள்.

உடனே பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் திவான் சாமியாரைப் பார்த்து நிரம்பவும் கோபமாகப் பேசத் தொடங்கி, “என்ன ஒய்! நாங்கள் உம்மிடம் கேட்ட கேள்விகளுக்கு உத்தரம் சொல்லாமல்,