பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 5

நீர் மேன்மேலும் இந்த முதல் சாட்சியை அவமதிப்பாய்ப் பேசிக் கொண்டே போகிறீரே! நாங்கள் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்றார். -

திவான் சாமியார், அமைதியாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, ‘ஐயா! தாங்கள் இருவரும் சேர்ந்து என்னிடம் மூன்று கேள்விகள் கேட்டீர்கள். அவைகளுள் இரண்டு கேள்வி களுக்கு இந்த முதலியாரே சமாதானம் சொல்லிவிட்டார். இன்னம் ஒன்றுதான் பாக்கி இருக்கிறது. அதையும் இவரே சொல்லச் செய்கிறேன் என்றார்.

நீதிபதி, “எந்த இரண்டு கேள்விகளுக்கு இவர் சமாதானம் சொன்னார் ஐயா?” என்றார்.

திவான் சாமியார், “இந்த முதலியார் வாக்குமூலம் கொடுத்த காலத்தில், ‘நானும் இந்தக் கைதியும் இதற்கு முன் ஒருவரையொருவர் அறிந்தவர்களன்று’ என்று இவர் சொன்னார். இப்போது இவர்களுடைய பூர்வ வரலாற்றை நான் எடுத்துச் சொன்னேன். அதை ஆம் என்று இவர் ஒப்புக் கொண்டார். ஆகையால் இவர் கொடுத்த வாக்குமூலத்தில் பொய்யான விஷயம் இருக்கிறதென்று நான் சொன்னதை அவதூறு என்று பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் கருதியது சரியல்லவென்று இவரே சொல்வது போலாயிற்று. அதுவன்றி, நான் இவருடைய சம்சாரத்தைப் பாக்கியசாலி என்றும் மகாலக்ஷமியென்றும் சொன்னதும் அவதூறாகக் கருதப்பட்டது. இவர் அந்த அம்மாளைக் கலியாணம் செய்துகொள்ளுமுன் சுயமாகப் பாடுபட்டு நானுாறு ரூபாய் வைத்திருந்தார். இந்த அம்மாளைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்ற நினைவை இவர் கொண்டவுடனே இவருக்கு நாலாயிரத்து நானுாறு ரூபாய் சன்மானம் கிடைத்தது. இந்த அம்மாளைக் கலியாணம் செய்துகொண்டபிறகு, அது இப்போது லக்ஷம் ரூபாய்க்கு அதிகமாய்ப் பெருகி இருக்கிறது. கலியாணத்துக்கு முன் வெறும் கந்தனாக இருந்தவர் கலியாணம் ஆன பிறகு லக்ஷாதிபதியாகவும் மேலப்பண்ணைக் கந்தசாமி முதலியாராகவும் மாறி இருக்கிறார். ஆகவே, அந்த அம்மாளை மகாலக்ஷ்மி என்றும் பாக்கியசாலி யென்றும் நான் குறித்ததில் தப்பொன்றுமில்லை. நான்