பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 செளந்தர கோகிலம்

அடைந்து எல்லாவற்றையும் துறந்து பரதேசிக் கோலம் பூண்டேன். இந்த நிலைமையில் நான் என்னுடைய பழைய பெயர், பழைய பதவி முதலியவைகளைச் சொல்லிக் கொண்டே போனால், அதனால், எனக்கு கெளரதைக் குறைவு ஏற்படுமே யன்றி அது அதிகரிக்காதென்று நினைத்து நான் எதையும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தேன். இப்போது நான் திருட்டுக் குற்றத்தைச் செய்துவிட்டதாக இங்குள்ளோர் அபிப்பிராயப்படுகிறதாகத் தெரிகிறது. ஆகையால், இதனால் எனக்குப் பெருத்த இழிவும் களங்கமும் ஏற்படுவது நிச்சயம். நீரும் நானும் பழைய சிநேகிதர்கள். ஆகையால், உம்மிடம் மாத்திரம் நான் இன்னான் என்பதை வெளியிட்டால், நான் இந்தத் திருட்டை நடத்தியிறேன் என்பது உம்முடைய மனசுக் காவது அவசியம் படுமல்லவா. நீதிபதியினால் நான் தண்டனை யடைந்து சிறைச்சாலைக்குப் போனாலும் பிற்பாடாவது நீர் உண்மையை இந்த ஊராருக்குத் தெரிவிப்பீரல்லவா. அதைக் கருதி நான் இன்னான் என்பதை உமக்கு மாத்திரம் ரகசியமாகத் தெரிவிக்கத் தடையில்லை. அது மாத்திர மல்ல. இதற்கு முன் நான் உம்மோடு பழகிய காலத்தில் நீர் இருந்ததற்கு, இப்போது அமோகமாக விருத்தியடைந்து நிரம்பவும் சிலாக்கியமான பதவியிலிருப்பதைக் காண என் மனம் தாங்க முடியாத பரம சந்தோஷம் அடைகிறது. அதுவுமன்றி, நான் இன்னான் என்பதை அறிந்தால், நீரும், உம்முடைய மனையாளும் நிரம்பவும் சந்தோஷம் அடைவீர்கள். ஆகையால், அந்த சந்தோஷத்தை இல்லாமல் செய்யவும் நான் விரும்பவில்லை. இந்த முகாந் தரத்தைக் கொண்டும் என் பெயர் முதலிய விவரங்களை உம்மிடம் வெளியிடுகிறேன். ஆனால், அதை நீர் எவ்விடத்திலும் பகிரங்கப்படுத்துவதில்லையென்ற நிபந்தனைக்கு இணங்கினால், அதை நான் இப்போதே வெளியிடுகிறேன்” என்றார்.

அதைக்கேட்ட மேலப்பண்ணை முதலியார் அப்போதே பலவகைப்பட்ட யூகங்களினாலும் நினைவுகளினாலும் உலப்பப் ப்ட்டவராய்க் கட்டிலடங்கா ஆவலும் பதை பதைப்பும் கொண்டு, “அப்படியே ஆகட்டும். தங்களுடைய நிபந்தனைக்கு நான் கட்டுப்படுகிறேன்” என்றார்.