பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 61

திவான் சாமியார், “சரி; அப்படியானால் எனக்குப் பக்கத்தில் வாரும். உம்முடைய காதில் ரகசியமாகச் சொல்லு கிறேன்” என்றார்.

உடனே மேலப்பண்ணை முதலியார் சாட்சிக்கூண்டை விட்டிறங்கி, நிரம்பவும் பரபரப்பாய் திவான் சாமியாரிடம் சென்றார். தாம் சட்டப்படி செய்ய வேண்டிய விசாரணைக்குப் புறம்பான அத்தகைய நடவடிக்கைகளுக்குத் தாம் இடங் கொடுப்பது ஒழுங்கல்லவென்று நீதிபதி உணர்ந்தார். ஆயினும், அந்தக் கைதியின் மர்மத்தைத் தாமும் அறிந்துகொள்ள வேண்டு மென்ற ஆவலும் ஆசையும் கொண்டவராய் வியப்பே வடிவாக மெளனமாய் இருந்துவிட்டார். பிராசிகூடிங் இன்ஸ்பெக்டரும், மற்ற எல்லா ஜனங்களும் அவ்வாறே மிகுந்த ஆவலும் ஆச்சரியமும் அடைந்து அவர்களது சம்பாஷணையைக் கவனித்த வண்ணம் ஸ்தம்பித்து நின்றனர். அந்த இடம் முற்றிலும் நிச்சப்தமாக இருந்தது.

- மேலப்பண்ணை முதலியார் திவான் சாமியாருக்கருகில் செல்ல, பின்னர் முன்னவரது காதில் இரண்டு மூன்று நிமிஷம் வரையில் ஏதோ சில வரலாற்றைக் கூறினார். அதைக் கேட்டவுடனே, மேலப்பண்ணை முதலியார் கட்டுக்கடங்காத பெருத்த பிரவாகம் போல, அவரது மனத்தில் அபாரமான மகிழ்ச்சியும், ஆச்சரியமும், ஆனந்தமும் பொங்கிக் குபிரென்று கிளம்பின. அவரது உடம்பு மின்சார சக்தியால் ஊக்கப்பட்டது போல கட்டிலடங்காத மகா அமிதமான துடிதுடிப்பும் உற்சாக மும் கொண்டு பறந்தது. சிகை முதல் நகம் வரையில் உரோமம் சிலிர்த்து ஆனந்த தாண்டவமாட ஜிலிரென்று ஒருவித ஸாகம் அவரது உடம்பு முழுதும் பரவியது; அவர் தமது உன்னத நிலைமையையும் மறந்தார்; அது நியாய ஸ்தலம் என்பதையும் மறந்தார்; ஆயிரக்கணக்கான ஜனங்கள் தம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறந்தார். அவர் முற்றிலும் சன்னதங் கொண்டவர்போல மாறி, ‘ஆ அப்படியா என் காருண்ய வள்ளலா மறுபடி இந்த அடிமைக்குத் தரிசனம் கொடுக்கிறது! ஆ இது நிஜந்தானா! அடாடா என்ன பாக்கியம்! என்ன பாக்கியம்!” என்று கூறிக் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக