பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 64 செளந்தர கோகிலம்

எல்லோரும் குற்றமாகக் கருதினார்கள். நான் சொன்னது மெய் யென்பதை ருஜுப்படுத்தவே நான் உங்கள் புருஷருடைய பழைய வரலாற்றைச் சொல்ல நேர்ந்தது. உங்களை நான் வேண்டு மென்று அவமானப்படுத்தியதாக எண்ண வேண்டாம். நீங்கள் இத்தனை ஜனங்களுக்கும் முன்னால் வந்து நிற்பதைக் காண எனக்குச் சகிக்கவில்லை. நீங்கள் முதலில் உங்களுடைய வீட்டுக்குப் போங்கள். என்மேல் நீங்கள் திருட்டுக் குற்றம் சுமத்தியதாக நான் நினைக்கவே இல்லை. என்னுடைய கால பலன் இப்படிப் பட்ட பொய்த் தோற்றங்களையெல்லாம் உண்டாக்கிக் கொண்டே போகின்றது. ஆகையால் நான் யாரையும் நோவதற் கில்லை. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அம்மா! தாயே! நீங்கள் உங்களுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போங்கள்” என்று கூற, அதைக்கேட்ட பெண்மணி தமது புருஷரது முகத்தை நோக்கினாள். அவரும் அதை அதுமதித்தது போலக் காட்டிக்கொள்ள, உடனே அந்த ஸ்திரீ மறுபடி பயபக்தியோடு குனிந்து திவானை நமஸ்கரித்தபின் அவ்விடத்தைவிட்டு வெளியில் போய் விட்டாள்.

உடனே திவான் சாமியார் மேலப்பண்ணை முதலியாரை நோக்கி, “முதலியார் ஐயா! இது நீதி ஸ்தலம் என்பதை நாம் மறந்து நம்முடைய குடும்ப விஷயங்களையெல்லாம் இங்கே பேசிக்கொண்டிருப்பது உசிதமல்ல. நீதிபதியவர்கள் நிரம்பவும் பெருந்தன்மை வாய்ந்தவர்களாயிருப்பதுபற்றி, நாம் இவ்வளவு தூரம் சம்பாஷிக்க அவர்கள் அவகாசம் கொடுத்தார்கள். அவர்களெல்லோரும் காத்திருப்பதால், நாம் மேன்மேலும் இந்த வழக்கிற்குச் சம்பந்தப்படாத விஷயங்களைப் பேசிக்கொண்டே போவது ஒழுங்கல்ல. அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில் இன்னம் ஒன்று பாக்கி இருக்கிறது. அதாவது இவ்வளவு பெருத்த தொகை என்னிடம் எப்படி வந்ததென்பதற்கு இவர்களுக்குத் திருப்திகரமான சமாதானம் வேண்டும் என்றார்களல்லவா? அதையும் சொல்லுவதே இப்போது பாக்கியிருக்கிறது. நான் எல்லாவற்றையும் உண்மையில் துறந்துவிட்டேன். ஆனாலும், என்னிடம் மிச்சமிருந்த இந்தப் பெருத்த தொகையை தக்க சற்பாத்திரமாகப் பார்த்துக் கொடுத்துவிட வேண்டுமென்ற