பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 67

வாய்ந்தவர். அவர் அந்த லஞ்சத் தொகைக்கு ஆசைப்பட்டுத் தம்மையும் தம் சம்சாரத்தையும் இப்பேர்ப்பட்ட இழிவுக்கு ஆளாக்க உடன்பட்டிருக்க மாட்டாரென்பது நிச்சயம். ஆகவே, பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் கூறிய வியாக்கியானத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஆனாலும் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. திருடப்பட்ட சொத்து ஒருவரிடம் இருக்குமானால், அது தம்மிடம் நியாயமான வழியில் வந்ததென் பதற்கு தக்க ருஜு கொடுக்காவிட்டால், அவர் அதைத் திருடிய தாகவோ அல்லது திருட்டு சொத்தை வாங்கியதாகவோ கருதப் படுவதோடு, அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் தண்டனையை அடைய வேண்டியவராகிறார். அந்த நிலைமையில்தான் இப்போது நம்முடைய சாமியார் இருக்கிறார். எழுத்து மூலமாக என்னிடம் இருக்கும் சாட்சியத்தைப் பார்த்தால் இவர், குற்றவாளியென்று நான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். என் மனசாட்சிப்படி பார்த்தால், இவர் திருடரல்லவென்று விடுவிக்க வேண்டும். நான் என் மனசாட்சி ஒன்றை மாத்திரம் பிரதான மாகக் கொண்டு எழுத்து மூலமாக சாட்சியங்களை அடியோடு நிராகரிப்பதும் சட்ட விரோதம். ஆகையால், இரண்டையும் கருதி நான் இவருக்கு ஏதாவது சொற்ப தண்டனை கொடுப்பதே நியாயமென்று கருதுகிறேன். இவரிடத்தில் இருந்து எடுக்கப் பட்ட பெருத்த தொகை இவருக்குச் சொந்தமானதென்றே நான் எண்ணுகிறேன். அது சம்பந்தமாக இவருக்கு விரோதமான சாட்சியம் எதுவுமில்லை. ஆகையால் என் வேலை சுலபமாகி விட்டது. அந்தத் தொகையை இவரிடம் கொடுத்துவிட வேண்டு மென்று நான் தீர்மானிக்கிறேன். எல்லோரும் கொஞ்ச நேரம் இருங்கள். என் தீர்ப்பை இப்பொழுதே எழுதிப் படித்து விடுகிறேன்” என்று கூறிவிட்டுக் காகிதத்தை எடுத்து எழுதத் தொடங்கினார். -

நியாயாதிபதி கூறியது முற்றிலும் நீதியான தீர்மானமாகவே எல்லோருக்கும் பட்டது. ஆனாலும், முற்றிலும் நிரபராதியும், தமது பேருபகாரியும்ான சுவாமியாருக்குத் தண்டனை கிடைக்கப் போகிறதே என்று மேலப்பண்ணை முதலியார் நினைத்து மிகுந்த விசனமும், ஏக்கமும் கொண்டு சஞ்சலமடையலானார். நீதிபதி