பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 5

அவ்வாறு புஷ்பாவதி கண்ணபிரானின் மீது குற்றம் சுமத்திப் பேசியது, கோகிலாம்பாளின் மனத்தில் சுருக்கென்று தைத்து மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்கியது. ஆனாலும், அவள் கூறியது நியாயமான வார்த்தையென்பதையும் அவள் உணர்ந்தவள். ஆகையால், அதற்கு எவ்வித மறுமொழியும் கொடாமல் தனது மனத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டவளாய்த் தனது முகத்தை அப்புறம் திருப்பிக் கொண்டாள். --

அவளது கிலேசத்தைக் கண்ட பூஞ்சோலையம்மாள் உடனே புஷ்பாவதியை நோக்கி, “அம்மா அவர் பேரிலும் குற்றமே இல்லை. நான் இவளைத் தேடிக்கொண்டு போனேனல்லவா. போய் அவரைப் பார்த்துச் சங்கதியை விசாரித்தேன். போலீசார் அவரையும் ஏமாற்றி அந்தக் கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்டு வந்திருக் கிறார்கள். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் இவளை எப்போது பார்த்தானோ தெரியவில்லை. அதிலிருந்து அவனுக்குத் துர்ப்புத்தி பிடித்துப் போயிருக்கிறது போலிருக்கிறது. அவன் வெகு தந்திர மாக இத்தனை காரியங்களையும் செய்து, கோகிலா தன்னுடைய வீட்டுக்கு வரும்படி சூழ்ச்சி செய்திருக்கிறான்” என்று கூறி கண்ண பிரானிடத்தில் தான் கேட்டுத் தெரிந்து கொண்ட வரலாறு முழுதையும் எடுத்துக் கூறினாள். அதைக் கேட்ட கோகிலாம் பாளின் மனதும் ஒருவித மகிழ்ச்சியடைந்தது. தனக்குக் கடிதம் எழுதிய விஷயத்தில் தனது மணாளன் மூடத்தனமாக நடந்து விட்டானென்ற அபிப்பிராயம் அவளுக்குள் இருந்து வதைத்து வந்தது. ஆகையால், அது உடனே விலகிப் போயிற்று. கண்ண பிரான் தவறான காரியம் எதையும் செய்துவிட வில்லையென்றும், போலீசார் அவனை ஏமாற்றி விட்டார்கள் என்றும் கோகிலாம் பாள் உணர்ந்து கொண்டாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட புஷ்பாவதி நிரம்பவும் வியப்பாகப் பேசத் தொடங்கி, “அடடா அந்த நாய்க்கு வந்த கேடுகாலமென்ன? அவன் போலீஸ் இன்ஸ்பெக்டராய் இருந்து விட்டால், ஊரிலிருக்கும் பெண்கள் மேலெல்லாம் தான் துராசை கொள்ளலாம் என்றும், தான் அவர்களை அபகரித்துப் போய் பலாத்காரம் செய்யலாம் என்றும் நினைத்துக் கொண்டான் போலிருக்கிறதே! நிச்சயதார்த்தம் நடந்த காலத்தில் வந்து