பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர கோகிலம்

83

சாமியாருக்கு அபராத தண்டனை விதிப்பாரோ அல்லது இரண் டொரு வாரம் வரையில் சிறைச்சாலை தண்டனை விதிப்பாரோ வென்று எல்லோரும் பல மாதிரியாக எண்ணியபடி ஆவலே வடிவாக இருந்தனர். -

திவான் சாமியார் தமது களங்கம் நீங்கியதையே பிரதான மாகக் கருதி மகிழ்ச்சியடைந்தாரன்றி, தமக்குச் சொற்ப தண்டனை கிடைக்கப் போகிறதே என்பதைப்பற்றி சிறிதும் வருந்தவில்லை. அந்த நிலைமையில் இரண்டு போலீஸ் ஜெவான்கள் கைவிலங்கிட்ட ஒரு குறவனைக் கச்சேரிக்குள் நடத்திவந்து நியாயாதிபதிக்கு முன்னால் நிறுத்திவிட்டுச் சலாம் செய்தனர். தீர்ப்பு எழுதுவதில் தமது முழு கவனத்தையும் செலுத்தி இருந்த நீதிபதி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து ஆத்திரமடைந்து, “என்ன ஐயா இது: ஒரு வழக்கில் தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கையில் இன்னொன்றைக் கொண்டு வந்து நடுவில் நுழைய விடுகிறீர் களே! என்ன அவசரம் உங்களுக்கு? கொஞ்சம் பொறுத்திருந்து, அழைத்து வாருங்கள். வெளியில் போயிருங்கள்’ என்று கண்டித்துக் கூறி விட்டுத் தமது தீர்ப்பை மேலும் எழுதத் தொடங்கினார்.

உடனே ஜெவான்கள் இருவரில் ஒருவன் நீதிபதியை நோக்கி, “இல்லை எஜமானே! இந்த வழக்கு சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளி இந்தக் குறவன்தான்; இந்தச் சாமி யாரல்ல. ஆகையால் தாங்கள் தீர்ப்பு எழுதுவதை நிறுத்துங்கள்’ என்றான்.

அவனது சொற்களைக் கேட்டு, அங்கு இருந்தோர் அனை வரும் மிகுந்த வியப்பும் களிப்பும் அடைந்து ஜெவான்களையும், குறவனையும் உற்று நோக்கினர். அவ்வாறே, திடுக்கிட்டுப் போய் அளவற்ற வியப்பும் கோபமும் கொண்ட நியாயாதிபதி பிராசி கூடிங் இன்ஸ்பெக்டரை நோக்கி, “என்ன இன்ஸ்பெக்டரவர் களே ஒவ்வொரு வழக்கிலும் உண்மையான குற்றவாளி யொருவன், கற்பனையான குற்றவாளியொருவன் என்று போலீசார் இவர்களைத் தயாரிக்கிறார்கள் போலிருக்கிறதே! என்ன வெட்கக்கேடையா இது!” என்று கூறினார். அதைக்