பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 69

கேட்ட பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் அங்கே வந்த ஜெவான் களை நோக்கி, ‘என்ன அப்பா இது! இவனை எங்கே பிடித்தீர்கள்?’ என்றார்.

உடனே முன் பேசிய ஜெவான், “எஜமானே! இந்தக் குறவன் கொஞ்ச நாழிகைக்கு முன்பு அம்மன்பேட்டைக் கள்ளுக் கடைக்குப் போய் அந்தக் கடையின் சொந்தக்காரரான சாணார முத்துக் கருப்பனிடம் ஒரு வைர மோதிரத்தையும், தங்கச் சங்கிலித் துண்டையும் ரகளிலியமாகக் கொடுத்து, அவைகளை வைத்துக் கொண்டு பத்து ரூபாய் பணம் கொடுக்கும்படி கேட்டானாம். மோதிரம் வைர மோதிரமாயிருப்பதையும், சங்கிலி துண்டாக வெட்டப்பட்டிருந்ததைக் கண்டும், அவன் உடனே சந்தேகங்கொண்டு, தான் பணத்துக்கு ஆளை அனுப்பு வதாகச் சொல்லி குறவனை அங்கே இருக்கும்படி செய்துவிட்டு, எங்களிடம் அவசரமாக ஒர் ஆளை அனுப்பி வைத்தான். நாங்கள் உடனே ஒடி அவனைப் பிடித்துக் கொண்டு நகைகளை யும் கைப்பற்றி, அவனிடமிருந்த வெற்றிலைபாக்குப் பையைச் சோதித்துப் பார்த்தோம். அதற்குள் இரும்பை வெட்டும் கத்தரிக்கோல் ஒன்று இருந்து அகப்பட்டது. இந்த நகைகள் எங்கிருந்து அவனுக்குக் கிடைத்தனவென்று நாங்கள் கேட்டதற்கு, முதலில், இவன் இவைகள் ரஸ்தாவில் கிடந்து அகப்பட்டன வென்றான். பிற்பாடு அங்கிருந்த ஜனங்களில் சிலர் இவனைப் பயமுறுத்தவே, இவன் பயந்து கொண்டு, உடனே உண்மையை ஒப்புக் கொண்டான். நேற்று கண்டியூர் ரஸ்தாவில் சுவாமி வந்த சமயத்தில், தான் ஒரு குழந்தையின் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி, கழுத்துச் சங்கிலியை வெட்டி எடுத்ததாகவும், அப்போது குழந்தையின் தாயார் அதைக் கண்டு கொண்டதாகவும், தான் உடனே சங்கிலியின் கொக்கியைக் கழற்றி, சின்ன பாகத்தை எடுத்து அந்த அம்மாளுக்குப் பக்கத்திலிருந்த யாரோ ஒரு பரதேசியினுடைய சட்டைப் பைக்குள் போட்டுவிட்டுக் கீழே குனிந்து கும்பலுக்குள் புகுந்து தந்திரமாய்த் தப்பி ஓடிப் போய் விட்டதாகவும் இவன் ஒப்புக் கொண்டான். நாங்கள் உடனே சாமான்களுடன் இவனை அழைத்துக் கொண்டு வந்தோம். இந்த வழக்கின் விசாரணை இன்று இங்கே நடக்கிறதென்பது