பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο செளந்தர கோகிலம்

தெரியுமாகையால், அநியாயமாய் சாமியாருக்கு தண்டனை கிடைத்துவிடப் போகிறதேயென்று நினைத்து நாங்கள் இவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகாமல், நேராக இங்கேயே அழைத்து வந்தோம்” என்றான்.

அந்த வரலாற்றைக் கேட்கவே, அங்கிருந்தோர் அனைவரும் மிகுந்த சந்தோஷமும் குதூகலமும் அடைந்து ஆரவாரம் செய்தனர். மேலப்பண்ணை முதலியாருக்கு அப்பொழுதே ஒழுங்காக மூச்சு வரத் தொடங்கியது. அவரது முகம் சந்தோஷத் தினால் அப்பொழுதே மலரத் தொடங்கியது. “ஆகா இந்தக் குறவன் செய்த காரியம் எப்பேர்ப்பட்ட அநர்த்தத்தை விளை வித்து விட்டது! எப்பேர்ப்பட்ட பரம ஸாதுவான மகானை எல்லோரும் கேவலமாக மதிக்கும்படியாகி விட்டது. அக்கிர மத்தைக் கண்டு தெய்வம் சும்மா இருக்குமா! நல்ல சமயத்தில் உண்மை வெளியாகும்படிச் செய்துவிட்டதல்லவா! எம்பெரு மானுடைய சக்தியை யாரே அறியவல்லார்’ என்று கூறி முதலியார் நியாயாதிபதியை நோக்கினார்.

அப்பொழுது மேஜையின்மேல் வைக்கப்பட்ட நகைகளை நீதிபதி எடுத்துப் பார்த்து, சங்கிலித் துண்டுகள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பொருத்திப் பார்த்துத் திருப்தி செய்து கொண்டு மேலப்பண்ணை முதலியாரையும், சாட்சி கிருஷ்ண பத்தரையும் அருகிலழைத்துக் காட்ட, அவர்கள் அவைகள்தான் களவாடப்பட்ட நகைகள் என்று உறுதியாகக் கூறினர்.

உடனே நீதிபதி குறவனை நோக்கி, “ஏனடா? சேவகர் இப்போது சொன்னாரே, அது நிஜந்தானா?” என்றார்.

குறவன், ‘இல்லை எஜமானே! இந்த ஐயாமாரும் கள்ளுக்கடைக்கார ஐயாவும் சேர்ந்து என்னை அடித்துக்கொன்று விட்டார்கள் எஜமானே! சேவகர் ஐயாவின் இடுப்பில் தொங்குகிற குட்டைத்தடியை எடுத்து என் கைவிரல்களில் அடித்ததில் ஒரு விரல் முறிந்து போய்விட்டது எஜமானே! விரலை இதோ பாருங்கள்’ என்று கூறி நிரம்பவும் வீங்கிப் போயிருந்த தனது விரல்களை நீதிபதிக்குக் காட்டினான். - நீதிபதி அவனது விரல்களைப் பார்த்தும் பார்க்காதவர் போல நடித்து, “ஓ! உன்னை அடித்தார்களா அது பிசகுதான்.