பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 செளந்தர கோகிலம்

தாங்கள் சர்வேசனுடைய செங்கோலைத் தாங்கி, அவனுடைய பிரதிநிதி போல இருக்கிறபடியால், அதற்குத் தகுந்த உத்தம லக்ஷணங்கள் தங்களிடம் சம்பூர்ணமாக இருக்கின்றன. பரமதயாபரனான கடவுளின் நீதி எப்போதும் எல்லா இடங் களிலும் இதே போல் திராசு முனையில் நிற்க அவனுடைய பேரருள் உண்டாகட்டும். ஐயா! நீதிவானே! சற்று முன் பிராசிகூடிங் இன்ஸ்பெக்டரவர்கள் என்னைக் குறித்து அநுதாப மொழி சொன்ன சம்பந்தமாய் நான் ஒரே ஒரு விஷயம் விக்ஞாபனம் செய்துகொண்டு இவ்விடத்தை விட்டுப் போய் விடுகிறேன். வேறே புலன் கிடைக்கவில்லையாகையால், சட்டப்படி போலீசார் என்னைக் கைதியாக்கியது நியாயமான செய்கையே. அதைப்பற்றி யாரும், அவர்கள் பேரில் குறை கூறுவது சரியல்ல. ஆனால் நான் இதற்கு முன் தக்க பெரிய மனிதராக இருந்ததாகத் தெரிவதால், தாம் வருந்தி அநுதாபம் காட்டுவதாக அவர் தெரிவித்தார். அப்படி அவர் சொன்னதுதான் அவ்வளவு சிலாக்கியமாகத் தோன்றவில்லை. என்னுடைய பூர்வீக வரலாறு தெரியாமலே இருப்பதாக வைத்துக் கொள்ளு வோம்” என்று கூறி நீதிபதியை மறுபடி நமஸ்கரித்தபின் அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டார்.

உடனே நீதிபதி தாம் அந்த வழக்கின் விசாரணையை மறுநாள் வரையில் ஒத்தி வைத்திருப்பதாகவும், குறவன்மீது பிராது தயாரித்துக் கொண்டு, சாட்சிகளுடன் அவனை மறுநாள் அழைத்து வரவும் உத்தரவு செய்தார். போலீசார் குறவனை வெளியில் அழைத்துச் சென்றனர். ஜனங்கள் அந்தக் குறவனைத் தாறுமாறாக துஷித்ததன்றி, நிரம்பவும் சாந்தமான முகத்தோடு வெளிப்பட்ட திவான் சாமியாரைக் கண்டு எல்லோரும் மிக மிகப் பணிவாகவும் பயபக்தி விநயத்தோடும் அவரை நமஸ் கரித்து, அவருக்கு வழி விடுத்தனர். அவருக்குப் பின்னால் ஒடோடியும் வந்த மேலப்பண்ணை முதலியார், “எஜமானே! என்னுடைய ஸாரட்டு வண்டி வந்து தயாராகக் காத்திருக்கிறது. அடியேன் மேல் கிருபை கூர்ந்து தாங்கள் வந்து வண்டியில் அமர்ந்து, தாங்கள் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் குடிசைக்கு விஜயம் செய்து, ஏழையேங்களுடைய மங்களா