பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 செளந்தர கோகிலம்

ஏற்பட்டும், நீ பழைய நிலைமையை மறவாமலும் செருக்கென் பதையே கொள்ளாமலும் இருப்பதைக் காண, என் உள்ளம் பூரிக்கிறது. என் மனசில் பொங்கியெழும் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் நான் எப்படித்தான் உனக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன். நீ மேன்மேலும் அபிவிருத்தியடைந்து இன்னமும் அதிக அமோகமான பெருவாழ்வு வாழப்போகிறாய் என்பதற்கு இதுவே அறிகுறி. அப்பா கந்தசாமி! நான் இப்போது நிரம்பவும் அவசரமான ஒரு காரியத்தை உத்தேசித்து ஒரிடத்துக்குப் போகிறேன். நேற்றைக்கே நான் அங்கே போயிருக்க வேண்டியது. இந்த வழக்கினால், அது இன்று வரையில் தடைப்பட்டுப் போயிற்று. என்ன உள் கருத்தோடு ஈசன் இந்த ஒரு நாளைய தாமதத்தை ஏற்படுத்தினானோ அது பின்னால்தான் தெரிய வேண்டும். நான் இப்போது உன்னுடைய வீட்டுக்கு வர வில்லையே என்று நீ விசனப்படாதே. நான் போய் என்னுடைய அவசர காரியத்தை முடித்துக்கொண்டு மறுபடியும் இன்னொரு முறை நான் உன்னைக் காண்கிறேன். அதுவரையில் பொறுத்துக் கொள். இந்த நகை போன விஷயத்தில் என்னுடைய நிலைமை யில், வேறே யார் இருந்தாலும், அவர் பேரில் இந்தக் குற்றம் ஏற்பட்டே இருக்கும். இது உங்களுடைய குற்றமேயல்ல. இதைப் பற்றி உங்கள் பேரில் நான் அனுப்பிரமாணமும் மனவருத்தம் வைக்கவில்லை. நீயும், உன் சம்சாரமும் நல்ல தங்கமான குணமுடையவர்கள்; அக்கிரமமாக யார் பேரிலும் குற்றம் சுமத்தவே மாட்டீர்கள். அதுவுமன்றி நான் இன்னான் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், என்னைப் போலீசார் அழைத்துக் கொண்டுபோக நீங்கள் ஒரு நாளும் இடங்கொடுத்திருக்க மாட்டீர்கள். ஆகையால், இதைப்பற்றி நான் இனி நினைக்கவே போகிறதில்லை. இதை நாம் இருவரும் பெருத்த நன்மையாகவே கொள்ள வேண்டும். நான் இந்த ரஸ்தாவின் வழியாக எத்தனையோ தடவை போய் வந்து கொண்டிருக்கிறேன். நீ இவ்விடத்தில் இருக்கிறாய். நாம் இருவரும் சந்திப்பதற்கு ஒரு சாதனமாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இல்லா விட்டால் நாம் இன்று சந்தித்திருப்போமா? மாட்டோமல்லவா. ஆகையால், இதை நாம் கடவுளுடைய கருணா கடாrமென்று நினைத்து இதைக் குறித்து சந்தோஷப்படுவதே சரியான