பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 செளந்தர கோகிலம்

கண்டிருக்கிறேன். ஆகையால், அதே காரணத்தினால்தான், நான் இந்த நிலைமைக்கு வந்தேனே தவிர வேறில்லையென்று நான் எப்போதும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். கலியாணம் செய்து கொண்டபின் என் சம்சாரத்தையும் அழைத்துக் கொண்டு நான் தங்கள் சம்சாரமாகிய என் தாயைக் கண்டு அவர்களுடைய காலில் கும்பிட்டுவிட்டு வரவேண்டுமென்று நினைத்துத் திருவட மருதூருக்குப் போயிருந்தேன். அவர்களும், குழந்தையும் காணப்படவில்லையென்றும், தாங்கள் புலியினால் அடிபட்டு இறந்துபோய் விட்டீர்களென்றும் கேள்வியுற்றேன். அதுமுதல் இதுவரையில் என் மனம் பட்டயாடும், நான் அநுபவித்த துயரமும் இவ்வளவென்று சொல்ல முடியாது. எனக்கு எவ்வளவோ ஏராளமான செல்வம் பொங்கிக்கொண்டே இருந்தாலும் என் மன வியாகூலத்தில், அது சந்தோஷத்தையே கொடுக்கவில்லை. பஞ்சபrதிய பரம அன்னத்தைப் போட்டு அவைகளில் விஷத்தையும் கலந்துவிட்டதுபோல, ஈசுவரன்செய்து விட்டானேயென்று நினைத்து நினைத்து நான் ஏங்கிக் கிடந்தேன். வெளிக்கு மாத்திரம் நான் ஒரு பெரிய மனிதனாகவும், சந்துஸ்டியாயிருப்பவன் போலவும் காணப் பட்டேனேயன்றி, உள்ளுக்குள், நான் மகா கொடிய வேதனை அனுபவிப்பவனாய் இருந்தேன். என் துயர இருள் வேறு எதனாலும் நீங்குவதாக இல்லை. அதைப் போக்கடிக்கத் தக்க சூரியன் தாங்களே! ஆகையால், இனிதான் நான் உண்மையில் rேமப்படப் போகிறேன். எப்படியாவது தாங்களும், என் தாயும் சேர்ந்து பார்வதி பரமேசுவரர் போலவும், மகாலக்ஷ்மி ஸ்ரீமந் நாராயணர் போலவும் எனக்கு வெகு சீக்கிரம் காட்சி கொடுக்க வேண்டும். அதையே நான் என் தபசாக இரவு பகல் செய்து கொண்டிருப்பேன். தங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எப்போதும் என்மேல் இருக்க வேண்டும்” என்று நிரம்பவும் உருக்கமாகவும் மனநைந்து கண்ணிர் விடுத்தும் கூறினார்.

திவான் சாமியாரும் அதற்குத் தக்கபடி மறுமொழி கூறி, தாம் கூடிய விரைவில் அவரைப் பார்ப்பதாக வாக்னுறுதி செய்து கொடுத்தபின் அவரை விட்டுப் புறப்பட்டார். உடனே முதலியார் திவான் சாமியாரை நோக்கி, “எஜமானே! தாங்கள்