பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 செளந்தர கோகிலம்

அவரைப் பிடித்துக்கொண்டு போனானே அந்த இன்ஸ்பெக்டர் தானே’ என்றாள். பூஞ்சோலையம்மாள், “ஆம், அவனாகத்தான் இருக்க வேண்டும்” என்றாள்.

புஷ்பாவதி, “அவனை நான்கூடப் பார்த்திருக்கிறேனே! அவன் பனை மரத்தைப் போலல்லவா இருந்தான். குழந்தைகள் அவனைப் பார்த்தால், அவன்தான் எமதர்மராஜனோ என்று பயந்து நடுநடுங்கிப்போய் விடுவார்களே! அவனுக்கா இப்படிப் பட்ட கேடு காலம் வந்தது! அவனுக்கு வெகு சீக்கிரம் அழிவு காலம் வந்துவிடும். போலீஸ் அதிகாரியாயிருந்தால் மாத்திரம் அவன் அக்கிரமம் செய்தால் அவன் என்றென்றைக்கும் தப்பித்துக் கொண்டிருக்க முடியுமா? எப்பேர்ப்பட்ட மாயாவியான இந்திர ஜித்தனானாலும், அவனை வெகு சுலபத்தில் வென்று அழித்து விடக்கூடிய தந்திர ஜித்தன் ஒருவன் எப்படியும் தோன்றுவான்’ என்றாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், “ஆமம்மா அக்கிரமம் நீடித்து நிற்காதென்பது பிரத்தியrமான சங்கதிதானே. அப்படித் தான் இவனுடைய கதியும் முடியும். அதுவுமன்றி நம்முடைய கோகிலா தெய்வத்துக்குச் சமதையானவள். அவளுடைய மனம் புண்படும்படி அக்கிரமம் செய்தவன் வெகு சீக்கிரத்தில் அழிந்து நாசமாய்ப் போய்விடுவான். அதையும் நாம் நம்முடைய காதால் கேட்கத்தான் போகிறோம்” என்றாள்.

புஷ்பாவதி, “இந்தப் படுபாவி இன்ஸ்பெக்டரால் ஏற்பட்ட அபாயம் அவ்வளவோடு போகாமல், சொந்த ஜனங்களுக்கு முன்பு பெருத்த அவமானமாகவும் தலை குனிவாகவுமல்லவா முடிந்து விட்டது. இப்போது இங்கே வந்திருந்த உங்களுடைய சொந்த ஜனங்கள் எல்லோரும் கோகிலாவைப் பற்றி முற்றிலும் தப்பான அபிப்பிராயத்தோடல்லவா திரும்பிப் போயிருக்கிறார்கள். என் தமயனார் கூட அவர்களுடன் போய்விட்டதைப் பார்த்தால் அவரும் மற்றவரைப் போலத் தப்பான அபிப்பிராயம் கொண் டிருக்கிறார் என்றல்லவா தோன்றுகிறது. நீங்கள் இருவரும் ஜனங்களுக்கு முன்பு வாயை மூடிக்கொண்டு பேசாமலிருந்தது சரியல்ல. இப்போது என்னிடம் சொன்ன வரலாறு முழுதையும் நீங்கள் எல்லோருக்கும் முன்னால் தெரிவித்திருந்தால்,