பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T'8 செளந்தர கோகிலம்

புதிய சாமியார், ‘சுவாமிகளே! யாரோ ஒரு பரதேசி குழந்தையின் நகைகளைக் களவாடிவிட்டதாகச் சொல்லிக் கொண்டு சில பரதேசிகள் அந்த வழக்கின் விசாரணையைக் கவனிக்க வேண்டுமென்று கச்சேரிக்கு வந்தார்கள். அதைக் கேட்டு நானும் கச்சேரிக்கு வந்தேன். அங்கே கைதிக் கூண்டில் தாங்கள் நிற்கக் கண்டேன். உடனே எனக்கு ஆச்சரியம் உண்டாகிவிட்டது. ஏனென்றால், மகோபகாரியும் நற்குண புருஷருமான தாங்கள் அங்கே அந்த நிலைமையில் இருப்பீர் களென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதுவுமன்றி, தாங்கள் பாபநாசத்திற்குப் போயிருப்பதாகவும் திருவையாற்றிலுள்ள பெரியவர் சொல்லக் கேள்வியுற்றேன். ஆகையால், தாங்கள் இங்கே கைதிக் கூண்டில் இருந்தது எனக்கு நிரம்பவும் அதிசயமாக இருந்தது. ஆனாலும், மலைபோல வந்த அபாண்டப் பழி தெய்வத் திருவருளால் பணிபோல நீங்கிப் போனதைக் கண்டு நான் நிரம்பவும் ஆனந்தமடைந்து தங்களுடன் பேச வேண்டுமென்று கச்சேரிக்கு வெளியில் காத்திருந்தேன். தாங்கள் மேலப்பண்ணை முதலியாருடன் சம்பாஷித்துக் கொண்டிருந் தீர்கள். ஆகையால், அவர் போனபிறகு தங்களைத் தொடர்ந்து வந்தேன். தாங்கள் திரும்பியே பார்க்காமல் நடந்தீர்கள். தங்களைக் கூப்பிடுவது மரியாதையல்லவென்று நினைத்து நான் விசையாக நடந்து பின்னால் வந்தேன்’ என்றார்.

திவான் சாமியார், ‘ஓகோ அப்படியா சரி, நீங்கள், திருவையாற்றிலுள்ள பெரியவரிடம் எதற்காகப் போனிர்கள்? நான் பாபநாசத்துக்குப் போயிருந்ததை அவர்கள் உங்களுக்குச் சொல்ல வேண்டிய பிரமேயமென்ன?” என்றார்.

புதிய சாமியார், “ சுவாமிகளே அடியேனுடைய பூர்விகர் களுக்குச் சொந்தமான ஊர் திருவடமருதூருக்கடுத்த திருநாகேசு வரம். பல வருஷங்களுக்கு முன் என் தாய் தகப்பன்மார் என்னை அநாதரவாக விட்டு இறந்துபோய் விட்டார்கள். அந்த விசனத்தைத் தாங்க மாட்டாமல் நான் உலகத்தின் மேல் விரக்தியடைந்து காஷாயம் வாங்கிக் கொண்டு பரதேசியாகி விட்டேன். அதன்பிறகு நான் திருவடமருதூருக்குப் பல சமயங்களில் வந்திருக்கிறேன். இந்தப் பெரியவர் அடிக்கடி