பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 79

ஏழைகளுக்கும் பரதேசிகளுக்கும் அன்னமளிப்பது வழக்கம். நான் பலதடவை பெரியவருடைய வீட்டில் சாப்பிட்டிருக் கிறேன். அதிலிருந்து அவர்களை நான் நன்றாக அறிவேன். கடைசியாக சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன் நான் திருவட மருதூருக்குப் போயிருந்த சமயத்தில் இவர்கள் மார்படைப் பினால் இறந்து போய்விட்டதாகக் கேள்வியுற்றேன். அது எனக்கு நிரம்பவும் விசனமாக இருந்தது. பிறகு நான் அந்த ஊரை விட்டுப் பல rேத்திரங்களுக்குப் போயிருந்தேன். சிறந்த அன்ன தாதாவாகிய இந்தப் பெரியவர் இறந்து போனதைப் பற்றிய விசனம் வெகுகாலம் என் மனசை விட்டு விலகாமலேயே இருந்து வந்தது. நான் இந்த ஒன்றரை வருஷ காலமும் சோழநாடு பாண்டிய நாடுகளிலுள்ள புண்ணிய rேத்திரங்களுக்கு யாத்திரை போவதில் செலவிட்டு இப்போதுதான் திரும்பி வந்தேன். இரண்டு தினங்களுக்கு முன் நான் அகண்ட காவிரி இரண்டாப் பிரியும் மகா அழகு வாய்ந்த ஸ்தலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் குணசேகரபுரம் என்ற புண்ணிய rேத்திரத் திற்கு வந்திருந்தேன். அவ்விடத்தில் இந்தப் பெரியவரைப் பற்றி துரைத் தனத்தார் வெளியிட்டுள்ள விளம்பரத்தின் பிரதியொன்று எனக்குக் கிடைத்தது. அதைப் பார்க்க, நான் அளவற்ற ஆச்சரிய மும் சந்தோஷமும் அடைந்து இவர்களைப் பார்க்க மிகுந்த ஆசையும் ஆவலும் கொண்டு நேற்று காலையில் திருவையாற்றுக்கு வந்து சேர்ந்து பெரியவரைத் தரிசித்து எல்லா விஷயங்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இன்னார் என்பதையும், தாங்களே அவர்களுக்குப் புத்துயிர் கொடுத்து மறுபடி பழைய நிலைமைக்குக் கொண்டு வந்தவர்கள் என்பதையும், அவர்களுடைய சம்சாரத்தைக் கண்டுபிடிப்பதற் காகத் தாங்கள் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பதையும் அவர்கள் விரிவாய்ச் சொல்ல நான் தெரிந்து கொண்டேன். தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று நான் நேற்று முதல் ஆவல்கொண்டு தங்களுடைய வழியைப் பார்த்தபடி இருந்து, இன்றைய தினம் தற்செயலாகக் கச்சேரிக்கு வந்த இடத்தில் தங்களைக் கண்டேன். கண்டவுடன் நான் அடைந்த விசனம் சொல்ல முடியாது. இந்தப் பெரியவருக்குத் தாங்களே முக்கிய மான பற்றுகோலாயிருப்பதைக் கருதியாவது எம்பெருமான்