பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 செளந்தர கோகிலம்

தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நான் வேண்டிக் கொண்டபடியே இருந்தேன். முடிவில் தருமமே ஜெயமாய் முடிந்தது. நான் தங்களையும் தரிசித்தேன். என் கலியும் இனி நீங்கின மாதிரிதான். தாங்கள் செய்ய ஏற்றுக்கொண்டிருக்கும் காரியமோ மகா கடினமானது. தாங்களோ ஏகாங்கியாய் இருக்கிறீர்கள். தங்களுக்கு சீஷனாயிருந்து தங்களுடைய சிரமத்தில் ஒரு பகுதியை நான் ஏற்றுக் கொண்டு இந்தப் புண்ணிய காரியத்தைத் தாங்கள் அதிக விரைவில் நிறைவேற்று வதற்கு உதவியாயிருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன். நான் காஷாயம் மாத்திரம் வாங்கிக் கொண்டிருக்கிறேனேயன்றி, அதன் தருமங்களை நான் எந்த சற்குருவையும் அடுத்துத் தெரிந்து கொள்ளாமல் ஒன்றையும் அறியாப் பேதையாய் அலைந்து பூமிக்குப் பாரமாயும், சோற்றுக்கு நஷ்டமாயும் கிடந்து உழல்கிறேன். கச்சேரியில் தாங்கள் நடந்துகொண்ட மாதிரியி லிருந்து, இப்பேர்ப்பட்ட சற்குருவை நான் சரணமடைந்தால், என் ஆன்மா நல்ல கதியடைந்துவிடுமென்ற நிச்சயம் என் மனசில் உண்டாகிவிட்டது. நான் என்னுடைய சுயநலம் ஒன்றை மாத்திரம் கருதவில்லை. பெரியவருக்குப் பெண்ணைக் கொடுத்த வரான இராமலிங்க முதலியார் எங்களுடைய பந்து, அவரைச் சேர்ந்த மனிதர்கள் இன்னின்ன ஊர்களில் இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். அந்த உறவினர்களில் சிலருக்கும் எனக்கும் ஆதியில் சிநேகம் ஏற்பட்டிருந்தது. ஆகையால், தங்களை அவர்களிடமெல்லாம் அழைத்துக் கொண்டுபோய்ப் புலன் விசாரித்து அந்த அம்மாள் முதலியோர் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதை அதிசீக்கிரத்தில் கண்டு பிடித்து விடலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகையால், என்னைத் தாங்கள் தங்களுடைய நற்சீஷனாக ஏற்றுக்கொண்டு உய்வித்தருள வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டு கோள்” என்று நிரம்பவும் பயபக்தி விநயத்தோடு கூறி திவான் சாமியாரைப் பன்முறை உருக்கமாக நமஸ்கரித்தார்.

அவர் கூறிய வரலாற்றைக் கேட்ட திவான் சாமியார் மிகுந்த களிப்பும் பூரிப்பும் அடைந்தவராய், ‘ஆகா! அப்படியா! நான் ஒரு பெரிய துறவி. எனக்கு சிஷனில்லாமையால், என்