பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 83.

பெருமைக்குக் குறைவு ஏற்பட்டுவிடப்போகிறதென்று நினைத்துக் கடவுள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சீஷரைக் கொடுக்கிறார் போலிருக்கிறது. சரி, கொடுக்கட்டும். எந்தெந்த வேளையில் எந்தெந்தப் பெருமைகளை அவர் கொடக்கிறாரோ அதை நாம் ஏற்றுக் கொண்டே தீரவேண்டும். மாட்டேனென்று சொல்ல, நமக்கு அதிகாரமேது? சுவாமிகளே! நானும், தங்களைப் போலவே, உலகில் விரக்தியடைந்து தக்க குருவின் உபதேசம் பெறாமல் சுயமாக சந்நியாசம் வகித்துக் கொண்டவன். நானும் திக்கு திசையறியாமல் நடுக்கடலில் அகப்பட்டுத் திண்டாடும் மரக்கலத்தைப்போல இந்த உலகில் கிடந்து உண்மையானது எது, பொய்யானது எது என்பதை அறிய மாட்டாமல் மயங்கி நடைப்பினமாய் உழல்கிறேன். ஆகையால், நீங்கள் எனக்கு சீஷராயிருந்து எவ்விதப் பலனையும் அடைய முடியாது. உங்களுக்குக் குருவாயிருப்பதற்குத் தக்க யோக்கியதையும் என்னிடத்தில் இல்லை. ஆகையால், நாம் குரு சீஷன் என்கிற முறைமையை விட்டு ஒருவருக்கொருவர் உதவியாயிருக்கும் நண்பர் என்ற முறைமையை வகிப்போம். பெரியவர் விஷயத்தில் நீங்கள் எனக்கு எவ்வளவு உதவி செய்தாலும் அதை நான் முழு மனதோடும் மிகுந்த நன்றியறிதலோடும் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஏதடா இவர் இவ்வளவு கருக்காகப் பேசுகிறாரே யென்று நீங்கள் எண்ணக் கூடாது. எதிலும், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல், உண்மையை முன்னாகவே சொல்லித் திருப்திபடுத்துவதே சிலாக்கியமானது என்பது என் கோட்பாடு” என்றார்.

புதிய சாமியார் மிகுந்த சந்தோஷமும் பணிவும் காட்டி, ‘சுவாமிகளின் சித்தம் அடியேன் பாக்கியம்! எந்த நிலைமையில் சுவாமிகள் என்னை வைக்கக் கருதினாலும் அதற்கு நான் சித்தமாகக் காத்திருக்கிறேன். எப்படியாவது என் வாழ்நாளைத் தங்களுடைய வாழ்நாளோடு சம்பந்தப்படுத்தி பரோபகாரமான காரியத்தில் ஈடுபட வேண்டுமென்பது என்னுடைய அவா இந்த வகையிலாவது என்னுடைய சேவையைத் தாங்கள் ஏற்றுக் கொண்டீர்களே அது ஒன்றே போதுமானது. பூவைச் சேர்ந்த நாறும் மணம் பெறுவதுபோல இனி நானும் கடைத்தேறி விடுவேன். நல்ல நினைவுகளையே கொண்டு நல்ல காரியங் செ.கோ.:V-5