பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 85

உதவிச் சாமியார், ‘ஆம் சுவாமிகளே! நான் ஆற்றங்கரைக்குத் தான் போய்விட்டு வருகிறேன். நான் எழுந்து பார்த்தபோது, தாங்கள் அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்தீர்கள்; அப்போது நன்றாகப் பொழுது விடியவுமில்லை. நான் தங்களை ஏன் எழுப்புகிறதென்று நினைத்து அவசரமாக ஆற்றங்கரைக்குப் போனேன். போன இடத்தில் ஒரு சந்தோஷச் செய்தியும் கிடைத்தது. தெய்வந்தான் என்னைத் தட்டி எழுப்பி அவ்வளவு சீக்கிரமாக அங்கே அனுப்பியிருக்க வேண்டுமென்று நினைக் கிறேன்” என்றார்.

உதவிச் சாமியார், “நான் ஆற்றங்கரைக்குப் போன இடத்தில் இந்த ஊர் மனிதர் ஒருவரைக் கண்டேன். அவரும் நானும் லோகாபிராமமாய்ப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் இந்த ஊரில் உள்ள ஒரு நெல் மண்டியின் சொந்தக்காரர் என்றார். இந்த விஷயம் அவருக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலா மென்று நினைத்து நான் அவரிடம் கேட்டேன். அவர் கொஞ்ச நேரம் யோசனை செய்து ஞாபகப்படுத்திக் கொண்டு சில தகவல்களைத் தெரிவித்தார். அவருடைய சொந்த ஊர் திருச்செந்தூராம். அந்த ஊரைவிட்டு அவர் இங்கே வந்து நெல் மண்டி வைத்து ஆறுமாத காலந்தான் ஆகிறதாம். அந்தத் திருச்செந்தூரில் இராமலிங்க முதலியார் என்ற ஒருவர் வந்து அரிசி மில் வைத்திருப்பதாகவும், அவர் தம்முடைய சொந்த ஊர் தஞ்சை ஜில்லாவில் இருக்கிறதென்று சொல்லிக் கொண்ட தாகவும், அவர் நல்ல பணக்காரராய் இருந்தார் என்றும், அவருடன் ஒரு பெண்ணும் பிள்ளையும் அவருடைய சம்சாரமும் இருந்தனர் என்றும், நாம் உடனே புறப்பட்டு அந்த ஊருக்குப் போனால், அவரைக் கண்டுபிடிக்கலாமென்றும், நெல்லு மண்டி வர்த்தகர் சொன்னார். அந்தக் தகவலைக் கேட்டவுடன் எனக்கு உண்டான சந்தோஷத்துக்கு அளவு சொல்லவே முடியாது. இரண்டு தினங்களாய் நம்மைச் சோதித்த கடவுள் முடிவில் கிருபா நோக்கம் வைத்ததென்று நினைத்துக்கொண்டு, அதை உங்களி டம் சொல்லலாம் என்று ஒடோடியும் வந்தேன்” என்று கூறினார்.

அதைக்கேட்ட திவான் சாமியாரும் அபாரமான சந்தோஷமும் உற்சாகமும் அடைந்தார்; தாம் இனி இராமலிங்க