பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 செளந்தர கோகிலம்

முதலியாரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலாது என்று நினைத்து நம்பிக்கையற்றுத் தளர்வுற்றிருந்த அவரது மனம் தாம் அவர்களைத் திருச்செந்தூரில் அவசியம் கண்டுபிடித்துவிடலாம் என்ற உறுதியையும் நம்பிக்கையையும் கொண்டது. அதுவுமன்றி, தாம் ஏழு வருஷ காலத்திற்கு முன் சநிதொடர் மங்கலத்திலிருந்து புறப்பட்டுத் தென்னாட்டிலுள்ள திவ்விய rேத்திரங்களுக்கெல் லாம் சென்று திருவடமருதூருக்குப் போன காலத்தில் திருச்செந்தூருக்கு மாத்திரம் போகவில்லை. ஆதலால், அந்தக் குறையையும் கடவுள் இதன் மூலமாய்ப் பூர்த்திசெய்து வைக்கிறார் என்றும் திவான் சாமியார் தமக்குள் எண்ணிக் கொண்டார். உடனே திவான் சாமியார் எழுந்து உதவிச் சாமியாரையும் அழைத்துக் கொண்டு சென்று அந்த ஊரிலேயே தங்களது ஸ்நானம் போஜனம் முதலியவைகளை விரைவாக முடித்துக்கொண்டு பிரயாணம் புறப்பட்டு அன்றைய தினம் முழுதும் சென்று மறுநாட் காலையில் திருச்செந்தூரை அடைந்தார். திருச்செந்தில் அல்லது திருச்செந்தூர் என்பது சிறந்த சுப்பிரமணிய ஸ்தலங்களுள் ஒன்று. அது இராமேசுவரத்திற்கு அருகில் உள்ளது. சுப்பிரமணிய ஆலயம், கடலின் அலைகளால் மோதப்பட்ட வண்ணமிருக்கும் ஒரு குன்றின் மீது அமைந்து உள்ளது. ஆதலால், அதன் இயற்கை வனப்பு எவ்வாறிருக்கும் என்பது எளிதில் விளங்கும். நமது திவான் சாமியார் முருகக் கடவுளிடத்தில் அபாரமான பக்தியுடையர். ஆதலால், அந்த ஸ்தலத்தையடைந்தவுடன், ஒயாத் தொல்லைகளும், ஒழியாத் துயரமும், தொலையா மனப்பிணிகளும் நிறைந்த மண்ணுலகைத் துறந்து மோr லோகத்தை அடைந்துவிட்டவர் போல உணர்ந்து பக்திப் பெருக்கும், மனவுருக்கமும், ஆனந்த பரவசமம் கொண்டவராய் மாறிப் புத்துயிர் பெற்றவர் போலானார். அந்த ஸ்தலத்தில் செறிந்திருந்த கண்கொள்ளா இயற்கை வனப்பைக் காணக் காண, அவரது மனம் பக்திப் பெருக்கினால் பரவச மடைந்து பொங்கியது. முருகன் என்பதற்கு கட்டழகன் வாய்ந்தவன் என்று அர்த்தமல்லவா, அத்தகைய கடவுளை ஈன்ற பரமசிவன் அவருக்குத் தக்க மகா வசீகரமான ஸ்தலத்தையே அமைத்து வைத்திருக்கிறார் என்று திவான் சாமியார் தமக்குள் தீர்மானித்துக் கொண்டவராய்த் தமது சொந்தக் கவலைகளை