பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 7

அவர்களுடைய தப்பபிப்பிராயம் நீங்கிப் போயிருக்குமே. நல்ல சமயத்தில் பேசாமல் இருந்துவிட்டீர்களே!” என்றாள்.

பூஞ்சோலையம்மாள் சிறிதுநேரம் மெளனமாயிருந்தபின், ‘அம்மா வேளைப் பிசகுக்குத் தகுந்தபடி மனிதருக்குச் சமயத்தில் நல்ல யோசனையும் படுகிறதில்லை. இன்று காலையிலிருந்தே நாங்கள் புத்திக் குறைவான காரியங்களைச் செய்ய நேர்ந்து விட்டது. சிறைச்சாலையில் இருக்கிறவர் கோகிலாவை வரும்படி அழைத்தாரல்லவா. அவர் அழைத்திருந்தாலும், அவளை அனுப்புவது யுக்தமான காரியமல்லவென்பது என் புத்தியில் பட்டிருக்க வேண்டும். அவளை இங்கேயே வைத்துவிட்டு நான் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், போலீஸ் இன்ஸ் பெக்டருடைய எண்ணத்திலும் மண் விழுந்து போயிருக்கும். எங்களுக்கும் இப்படிப்பட்ட பெரிய அவமானம் நேரிட்டிருக்காது. காணிச் சோம்பல் கோடிக் கேடு என்று சொல்லுவார்கள். அதுபோல ஒர் அற்ப விஷயத்தில் நாம் எச்சரிக்கைக் குறைவாக நடந்துவிட்டால், அது பெருத்த அநர்த்தத்தில் போய் முடிகிறது. இன்று காலையில் இவளை அனுப்பியது பெரிய தவறு. அதன் பிறகு, இன்ன சொந்தக்காரருடைய வீட்டுக்கு இவள் போனா ளென்று பொய்யாக ஒருத்தருடைய பெயரைக் குறித்தது இரண்டாவது பெருத்த தவறு. இந்த இரண்டு விஷயங்களில் நானும் சரி, கோகிலாவும் சரி, இருவரும் குற்றவாளிகளே. அதற்குத் தகுந்தபடி கடுமையான தண்டனை எங்கள் இருவருக்கும் கிடைத்துவிட்டது. நான் சொன்னது போலவே, கோகிலாம்பாளும் வேறொரு சொந்தக்காரருடைய பெயரைச் சொல்லிவிட்டாள். அவர்கள் இருவரும் நேரில் வந்துவிட்டார்கள். ஐயோ நாம் இப்பேர்ப்பட்ட பொய்யைச் சொல்லிவிட்டோமே என்கிற திகிலே எங்களுடைய உயிரில் பெரும் பாகத்தையும் வாங்கி விட்டதன்றி, நாங்கள் வாயைத் திறந்து பேசவும் மாட்டாதபடி எங்களைக் கோழைகளாக்கிவிட்டது. அதனால்தான் நாங்கள் மற்ற வரலாறுகளைச் சொல்லக்கூடாமல் போய்விட்டது. எப்போதும் தன் வினை தன்னைச் சுடுமல்லவா. அது இப்போது எங்கள் விஷயத்தில் நிஜமாக முடிந்தது. இனி என்ன செய்கிறது. வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. எங்களுக்கு எவ்வளவு அதிகமான அவமானமும் இழிவும் ஏற்படக் கூடுமோ அவ்வளவும்