பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 செளந்தர கோகிலம்

சொன்னாரே! அவர் வேண்டுமென்றே பொய் சொல்லி இருப்பாரென்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது. பைத்தியக்காரனைப்போல இருக்கிற இந்தப் பரதேசிக்கு ஊரில் ஒரு கவளம் சோறு பிச்சை வாங்கித் தின்பதைவிட்டு அரிசி மில்லைப் பற்றி ஏன் கேட்க வேண்டுமென்ற எண்ணத்தினால், அவர் புரளி செய்திருந்தாலும் இருக்கலாம். சரி, இப்போது காரியம் ஒன்றும் முழுகிப் போகவில்லை. நல்ல புண்ணிய ஸ்தலத்திற்குத்தானே வந்தோம். இந்த ஸ்வாமி தரிசனம் நாம் நினைத்தபோது கிடைக்குமா இதுவும் ஓர் அதிர்ஷ்டமென்று தான் நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்.” என்றார்.

மதுரை, திருச்செந்தூர் ஆகிய இரண்டு இடங்களிலும் தமது ஆராய்ச்சி பலிதமடையாமல் அபஜெயத்தில் முடிந்துபோனதே என்ற நினைவு திவானினது மனத்தில் சகிக்கவொண்ணாத விசனத்தையும், ஏக்கத்தையும் வேதனையையும் உண்டாக்கி விட்டது. தாம் இனி தமது சிற்றன்னையை இந்த உலகில் காண இயலாது என்ற அவநம்பிக்கையும் மனத்தளர்ச்சியும் ஏற்பட்டுப் போகவே, “என்ன உலகம் இது! இந்தக் காரியத்தைத் தொட்டாலும், அது அபஜெயமாக அல்லவா முடிகிறது. சே! நான் என்ன மனிதன்’ என்ற விரக்தியும் வெறுப்பும் பெருகிப் போயின. அவரது சுப்பிரமணிய பக்தி அபாரமாகப் பொங்கி நெஞ்சையடைக்கத் தொடங்கியது. துயரமும் அழுகையும் கரைபுரண்டு எழுகின்றன. அந்த நிலைமையில் இருந்த திவான் சாமியாரும், உதவிச் சாமியாரும் தமது ஸ்நானம், நியம நிஷ்டைகள் முதலியவைகளை முடித்துக் கொண்டு, தேங்காய் பழம் முதலிய பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு முருகன் சந்நிதியை அடைந்து சுவாமி தரிசனம் செய்யத் தொடங்கினர். குருக்கள் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். சுப்பிரமணியரது திருநாமங்களை ஒவ்வொன்றாகக் கூறி அவர் வில்வங்களை எடுத்து அர்ச்சிக்கத் தொடங்கவே, திவானினது பக்திப் பெருக்கு உச்ச நிலையை அடைந்துவிட்டது. அவர் பைத்தியம் கொண்டவர் போல மாறித் தம்மை முற்றிலும் மறந்து பரவசமடைந்து கீழே விழுந்து விழுந்து கும்பிட்டெழுந்து கன்னத்தில் அடித்துக் கொள்ளுகிறார். கடவுளைத் தொழுகிறார் கண்ணிர் விடுத்துக்