பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 செளந்தர கோகிலம்

அவரை நோக்கி, ‘சுவாமிகளே! இந்தச் சத்திரத்தில் சாப்பாடு கிடைக்குமா?’ என்று வினவினார். ஐயர் சந்தோஷமாக நகைத்து, நீங்கள் இந்தப் பக்கத்திற்கே இதற்கு முன் வந்திராத புதிய மனிதர்கள் போலிருக்கிறதே! பதினாயிரக் கணக்கில் பணத்தை இறைத்துக் கலியாணம் நடக்குமிடத்தில் மாப்பிள்ளை தமக்கு ஒரு தாம்பூலம் கிடைக்குமாவென்று கேட்பது போலல்லவா இருக்கிறது உங்களுடைய கேள்வி. இதோ சுவரில் மாட்டியிருக்கும் விளம்பரத்தை நீங்கள் படித்துப் பார்த்திருந்தால், என்னிடம் நீங்கள் இப்படிப்பட்ட கேள்விகளையே கேட்டிருக்க மாட்டீர்கள். இந்தச் சத்திரத்தில் பகலிலும் சரி, இரவிலும் சரி, எத்தனை பேர் வந்தாலும், நெய்யில் செய்த பகrண பரமான்னங் களுடன் திவ்வியமான போஜனம் கிடைக்கும். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் இருந்து சுகமாகச் சாப்பிடலாம்” என்றார்.

திவான் சாமியார், “ஒருவேளைச் சாப்பாட்டுக்கு எவ்வளவு கிரயம் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்?’ என்றார்.

அதைக் கேட்ட ஐயருக்கு அவரை மீறி சிரிப்பு உண்டாகி விட்டது. அவர் கலகலவென்று சிரித்துக்கொண்டே திவான் சாமியாரை நோக்கி, “ஐயா! தாம் சத்திரத்தில் வந்திருந்து இப்படிப் பட்ட கேள்வியை நீங்கள் கேட்கிறீர்களே! உங்களுக்கு என்ன பதில் சொல்வதென்பது தெரியவில்லை. தயவுசெய்து அப்பேர்ப் பட்ட கேள்வியை மறுபடி கேட்க வேண்டாம். இது தர்ம சத்திரம் சோற்றுக் கடையல்ல. அவ்வளவேதான் நான் சொல்ல முடியும்’ என்றார்.

உடனே திவான் சாமியார், “சுவாமிகளே! நான் எங்கே போய் போஜனம் செய்தாலும், அதற்கு உடனே கிரயம் கொடுத்து விடுகிறது வழக்கம். அதுபோல, இங்கேயும் நான் கிரயம் கொடுத்து விடுகிறேன். அதை நீங்களாவது எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் இருவருக்கும் சாப்பாடு போடுங்கள் என்றார்.

அதைக்கேட்ட சத்திரத்தையர் தமது கைகளால் காதுகளைப் பொற்றிக் கொண்டு, “சிவ சிவா! அந்தப் பேச்சை இன்னொரு தரம் சொல்ல வேண்டாம், இது சிலாக்கியமான புண்ணிய