பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 95

rேத்திரம். இந்த இடத்தில் யாரோ தர்மவான் ரூபாயை ஏராளமாக அள்ளி இறைத்து ஏழைகளுக்கும், பரதேசிகளுக்கும் இலவசமாய்ச் சாப்பாடு போடும்படி வெகு நேர்மையான ஏற்பாடுகளையெல்லாம் செய்திருக்கிறார். அதில் நான் காசு வாங்குவதென்றால் என்னைப் போன்ற பரம துரோகி யாரும் இருக்க மாட்டான். முன் ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோ நான் இப்படிப்பட்ட சமையல் உத்தியோகத்தை அடைந்திருக் கிறேன். புண்ணிய rேத்திரத்தில் இருந்துகொண்டு தர்ம சொத்தை விற்றுப் பணம் சம்பாதித்தால், நான் ரெளரவாதி நரகத்துக்குத்தான் போய்ச் சேருவேன். ஐயா சாமியாரே! எனக்கு உங்கள் காசு வேண்டாமையா! சத்திரத்தின் சொந்தக்காரர் இன்னம் கொஞ்ச நேரத்தில் வருவார்கள். இந்தச் சொல் அவர்களுடைய காதில் விழுந்தால், நான் உடனே ஊரைவிட்டு ஒடிப்போக வேண்டியதுதான்’ என்றார்.

உடனே திவான் சாமியார் ஒருவாறு திருப்தியும் சந்தோஷமும் அடைந்து, “ஒகோ அப்படியா சங்கதி! இந்தச் சத்திரத்து முதலியார் இப்போது இங்கே வருவாரா?” என்றார்.

சத்திரத்தையர், “இந்தச் சத்திரத்தின் சொந்தக்காரர் முதலியார் அல்ல. இவர்கள் வாண்டையார் ஜாதியைச் சேர்ந்தவர்கள். என்ன காரணத்தினாலோ, இவர்கள் இதற்கு முதலியார் சத்திர மென்று பெயர் வைத்திருக்கிறார்கள். தினம் இதில் ஒரு பரதேசிக்காவது சாப்பாடு நடக்க வேண்டும், பகல் ஒரு மணிக்கு அவர்கள் தம்பதி சமேதராய் வந்து போஜனம் செய்து அதிதிக்கு நமஸ்காரம் செய்து, அவர் சாப்பிட்ட பிறகு மிஞ்சி இருக்கும் உச்சிஷ்டத்தில் கொஞ்சம் பிரசாதமாக வாங்கி எடுத்துக்கொண்டு அவர்களுடைய வீட்டுக்குப் போய், அதைத் தங்களுடைய சாப்பாட்டில் கலந்து கொண்டு சாப்பிடுவார்கள். இப்போது மணி 12 ஆய்விட்டது. யாரும் பரதேசிகள் வரவில்லையே யென்று நான் கவலை கொண்டு ஆவலோடு வழியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். செந்திலாண்டவர் உங்கள் இருவரையும் அனுப்பி வைத்தார். போஜனம் தயாராய் இருக்கிறது. இலைகள் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இருவரும் எழுந்து வாருங்கள்’ என்று வருந்தி உபசரித்துப் பார்த்தார். அவர் திவான்