பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவான் குழந்தையின் வீறலைக் கேட்டு, கிணற்றின் பிடிச்சுவரின் மேல் தவலையுடன் தாம்புக் கயிற்றை அப்படியே போட்டு விட்டு, உள்ளே ஓடிவந்து குழந்தையை வாரினான். பொங்கி வழியும் வியர்வை, மூலவர்மேல் பூசிய எண்ணெய் போல் அவன் கறுப்புடல் மேல் பளபளத்தது. அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை சின்ன மாவு பொம்மை போல்தானிருந்தது. இழுத்துப் பழக்க மில்லாததால் தாம்புக் கயிறு உள்ளங்கைகளை வீறுவீறாய் அறுத்திருந்தது. அனைத்துக் குலுக்கி அதன் அழுகையை அடக்க முயன்றான். ஆசைப் பெருக்கில் அர்த்தமற்ற சப்தங்கள் அவன் வாயினின்று பிறந்தன. ஆயினும் குழந்தையைத் தேற்ற அவை வகையற்றுப் போயின. அதன் கத்தல் இன்னமும் அதிகரித்தது. “என்ன! தாயில்லாக் குளந்தையா?” அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏற்கெனவே உள்ளுற வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறான். காலையில் வேலை பார்க்கப் போன பெண்பிள்ளை- சூரியன் உச்சிக்குப் போயிட்டுது- இன்னமும் திரும்பினபாடில்லே. இந்தப்