பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

its) * லா. ச. ராமாமிருதம் “குளந்தையா அது? நம்ம ஊரிலே முருங்கமரத்துலே இடையன் கொம்பு ஊறல்லே? அது மாதிரி ஒரே குச்சியா, உயிர் தொண்டையிலே நூலாட்டமா ஒடிக்கிட்டிருக்குது. தொடவே அச்சமாயிருந்திச்சு. "தாய்ப்பாலில்லே. குழந்தைக்கி வேறே குத்தம் இல்லே, உனக்கு ரெண்டு வேளை சோறு, ரெண்டு வேளை தீனி, மாசம் எட்டு ரூபாய் கொடுக்கறேன். இங்கே இருந்து இந்தக் குழந்தையை நீ காப்பாத்தனும் வீட்டுக்கு ஒரே பிள்ளை இது. இருந்திருந்து பெத்த மகன். நீ இருந்து காப்பாத்தனும் இன்னாங்க அந்தப் பெரியம்மா. "அம்மா! என் குளந்தை?-’ நானறியாமலே அந்தக் கேள்வி என் வாயிலேருந்து வந்திட்டுது. "உன் குழந்தைக்கு மாவு கரைச்சுக் கொடு- மாவு நான் கொடுக்கறேன். இந்தக் குழந்தைக்கு வயிற்றிலே கட்டி விழறது. உன் குழந்தை இது மாதிரி மோசமாயிருக்காது. என்ன சொல்றே? சட்டு புட்டுனு உன் புருஷன்கிட்டே சொல்லிட்டு வந்துடு. காலையிலே ஒரு வேளை சாயந்தரம் ஒருவேளை ஒன் குழந்தையையும் பார்த்துட்டு வா- நான் ஒண்னும் அப்படியாப்பட்ட பாவி இல்லே- என்ன சொல்றே? “நான் என்ன சொல்றது? எத்தனையோ விசயம் கவனிக்க வேண்டியிருக்குது. நம்ப புளைக்க வந்துட்டோம் உனக்கு சரியா புளைப்புக் கிட்டற வரைக்கும் வவுத்தெ ரெண்டுபேரும் கட்டிப்போட்டுக்கிட்டிருக்க முடியுமா? என் வவுத்தே அவுங்க வீட்டிலே களுவிட்டாலும் என் சம்பளம் உனக்கு மிச்சம்தானே. நான் ஒப்புக்கிட்டேன்.” மெளனம் இருவரிடையிலும் தேங்கியது. சத்திரத்தில் மூட்டையும் முடிச்சுமாய் இறங்குபவரும் வெளியே போவாரு மாய்ச் சண்டை போடுபவரும், கொட்டமடிப்பவருமாய்