பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢి அரவான் ళ " இரைச்சல் காதைப் பொளிந்தது. ஆயினும் இவ்விருவருக்கு மாத்திரம் அது துரத்துச் சத்தமாய்த்தானிருந்தது. “நீ ஒப்புக்கிட்டது தப்பு” என்றான் அவன். "அப்படியானால் நாம்ப இங்கே வந்ததே தப்பு:” "நாம்ட புளைக்க வந்ததே தப்பானால், நம்ப ஊரிலே மொத மொதல்லே ஒருத்தரையொருத்தர் சந்திச்சோமே, அதுவே தப்பு-" “இப்படி ஒருத்தரையொருத்தவர் கசந்துக்கிட்டுப் பேசினால் என்ன பிரயோசனம். புளைக்க வந்துட்டோம். புளைச்சு ஆகணும். இந்தா, மூணு ரூபா முன் பணம் வாங்கி வந்திருக்கேன். செலவுக்கு வெச்சுக்க-” "இதென்ன, நீ எனக்கு சோறு போடணும்னா நான் ஆண் புள்ளையா பிறந்துட்டு இருக்கேன்!- என்னான்னு நினைச்சுட்டே உன் மனசிலே என்னை?” அவள் தொண்டை கம்மியது. "நீ வேறே நான் வேறேன்னு துட்டு வாங்கறப்போ என் நெணைப்புலே படல்லே!” "ஆமா- அப்போ நம்ம ரெண்டுபேரும் கூடிப் பொறந்த கொளந்தெதான் வேறாப் போயிட்டுது- இல்லியா?” கரையினின்று திரும்பும் அலைகள்போல் நினைவுகள் பின்னோக்கிச் சுருண்டன. - நல்லபடியா நாலுபேர் பேசி முடிச்சுத் தாலி கட்டின கலியாணமாயிருந்தால் இத்தனை கஷ்டம் ஏன் படனும்? ஒரு இமைப் பொளுது வெறியிலே ஏமாந்து போன தோசத்துக்காக ஊரைவிட்டு ஓடிவந்து இங்கே இருக்க இடமும் புளைக்க வளியுமில்லாமே அல்லாடறோம்.' வாய்வழி புறப்படாத விதவிதமான கேள்விகள் அவரவர் மனசை இடித்தன.