பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவான் * 篱5 “அவுங்க விதவிதமாத் தீனி வாங்கிப் போடறாங்க; சொகம் சேக்கராங்க ஆசை உனக்கு அங்கேதான் பொங்கு தாக்கும்!” "ஏன் இப்படி சொல்றே? அங்கே துண்றது விஷமா யிருக்குது போதாதுன்னு நீ வேறே இங்கே வந்தா விஷத்தைக் கக்கணுமா? என் வவுத்திலே சுமந்த என் குளந்தையை நான் மறந்துட்டேன்னு நீ எனக்கு போதிக்க வேணாம்-” “அடிப்போடீ பாவி.” அவன் தெருவில் மனம் போனபடி போய்க்கொண் அந்த ஒரு வாரத்துக்குள் அவனுக்கும் அவளுக்கும் பேச்சு பட்டென அறுந்து போயிற்று. அவன் கண்ணெதிரே படிப் படியாய் அவன் குழந்தை தேய்ந்து போகும் கோரம் காணக்கான அவனுக்குச் சகிக்க முடியவில்லை. அவள்மேல் குற்றமில்லை என்று அவன் மனம் புரியாமலே அறிந்தது. இருந்தும் அவள் தனக்காகச் செய்யும் தியாகம் அருவருப்பை யும் பயங்கரத்தையும்தான் விளைவித்தது. அவ்விருவருக்காக அக்குழந்தை தியாகம். ஒரொரு சமயம் அவள் அவ்வீட்டில் எஞ்சிய ஆகாரங் களை அவன் சாப்பிடுவதற்காகக் கொண்டு வருவாள்.அதைச் சீந்தக்கூட அவன் மனம் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது. 'சீ! இதுவும் ஒரு புளைப்பா! இப்படி இந்த உசிரையும் உடலையும் ஒண்ணாத்தான் வெச்சு வாளாமே இருந்தாதான் என்ன? - டேய், நாட்டுப்புறம்! எங்கே பார்த்துக்கிட்டுப் போறே? வண்டியிலே மாட்டிக்கிட்டு சாவறத்துக்கா? சாவணும்னா சண்டையிலே போய்ச் சாவறதுதானே!”