பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 * ល. ៩. សា្រវិញព្លយ៉ា 'சண்டைக்குப் போய் சேந்த சமாசாரத்தை இவகிட்டெ சொல்லலே. அது வேறே பாக்கியிருக்குது. குளந்தையைப் புதைச்சுட்டு வந்தப்புறம் இருக்குது அந்த ரகளை. "ஆனால் சண்டையிலே போய்ச் சாவறதுக்குன்னு ஒரு சாவு பாக்கியில்லே இப்போ நான் செத்துப் போயாச்சு, உசிரோடு இருக்கிறது உசிரில்லே, உடல்தான். இதுவும் மடியறது இண்ணக்கில்லாட்டி நாளைக்கு நாளைக்கில்லாட்டி நாளண்ணக்கி, அண்ணக்கிமில்லாட்டி அதுக்கு மறுநாள்.' விடியிருட்டில்தான் குழந்தையின் 'கொர் கொர் சத்தம் அடங்கியது. அவள் முகத்தை அவன் பார்க்க முடியவில்லை. அவள் கன்னத்தை ஒரு தடவை வருடினான். அவன் மனம் நெகிழ்ந்தது. குழந்தையை அதன் கந்தையில் சுற்றிக்கொண்டு கிளம்பினான். - வெளியிலும் இருட்டு. ஒரு பீடிப்பொறி மாத்திரம் தெரிந்தது. > “யாரய்யா?” "நான்தான் பட்டணம்.”- குரலிலிருந்து தன்மேல் சீறி விழுந்த ஆள் என அறிந்தான். “சுடுகாட்டுக்குப் போற வளி எது ஐயா?” அந்த நெருப்புப் பொறி எழுந்தது. "நான் காண்பிக்கிறேன் suп-” பட்டணம் காண்பித்த வழியூடே அவன் பின்பற்றிச் சென்றான். O