பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வா இப்பொழுது அவள் என் கனவில் வந்தாள். ஏளனம் செய்யும் அவள் புன்னகையுடன் என் பின்னால் வந்து என் பேரை என் காதண்டை சொல்லி, என் தோளைத் தொட்ட மாதிரி இருந்தது. 'பூர்வா! என்று அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன். என்னைச் சுற்றி இருட்டுத்தான். கண்ணைத் தேய்த்துக் கொண்டேன். கண்கள் கண்ணிரில் நனைந்திருந்தன. தூக்கத்திலும் என்னையும் அறியாமல் நான் அழுதிருக்கிறேன். 'டாங்!'- எங்கேயோ மணி ஒன்று அடித்தது. இனி விடியும் வரையில் தூக்கம் எனக்கு வரப் போவதில்லை. திரும்பத் திரும்ப நினைத்த நினைவுகளே மனத்திரையில் ஆட ஆரம்பித்துவிட்டன. முன்னும் பின்னும், பின்னும் முன்னும். - ஆடி மூட்டத்தின் அதிகாலையில் சமுத்திரக் கரையோரத்தில் பூர்வாவின் கதை ஆரம்பமாகிறது. நான் அலைகளைச் சுட்டிக் காண்பித்துக்கொண்டு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தேன். “மனிதன் எவ்வளவோ கண்டு