பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வா *; 甘2贯 அப்பொழுது அந்த வழியில் வேட்டையாடிக் களைத்து, தொண்டை வறண்டு ஒரு ராஜகுமாரன் வந்தானாம். எங்கே பார்த்தாலும் ஜலமாய் இருந்தாலும் உப்புத் தண்ணிர்; தாகத்தினால் தவிக்கிறான். அப்பொழுது இந்தச் சமுத்திர தேவதையைக் கண்டானாம். அவன் அவளைக் கண்டு ஆசைப்பட்டானாம். “இப்படி ஏதோ கதை போகிறது. எனக்கு இப்பொழுது முழுதும் ஞாபகமில்லை. 'பாட்டி எப்படி அந்த ஜலதேவதை கரைக்கு வந்தாள்?” என்றேன். “சமுத்திரத்திலிருந்து.” “சமுத்திரம் எங்கே இருக்கிறது? “பட்டணத்தில்.” "அவள் எப்படி வரமுடியும்? "அலையே படகாய், அவள் கையே துடுப்பாய்...!" “படகு என்றால்? அலையென்றால்? துடுப்பு என்றால்?” “சனியனே! துரங்கறத்துக்குக் கதை சொன்னேனா? நீ குறுக்குக் கேள்வி கேக்கறத்துக்குக் கதை சொன்னேனா? திரும்பிப் படுடா கழுதை “என்ன எனக்குத் தோன்றிற்றோ தெரியவில்லை; அடுத்த நாள் காலை நான் அலமாரியிலிருந்து இரண்டு கை நிறையச் சில்லறையை அள்ளி மடியில் கட்டிக்கொண்டு ஒருத்தருக்கும் தெரியாமல் பட்டணம் கிளம்பிவிட்டேன். எங்களுர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை எங்கள் வீட்டுக்குத் தெரியும். அதனால் அடுத்த ஸ்டேஷனுக்கு நடந்து போய் வண்டி ஏறினேன். எந்த இடத்திற்கு டிக்கட் என்று கேட்டான். சமுத்திரத்திற்கு' என்றேன். இப்பொழுது சிரிப்பாய் வருகிறது.”