பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

பூர்வா i23 திடீரெனப் பூர்வாவின் தலை கிறுகிறுத்துக் கண்களில் ஒளி மங்கியது. நான் தாங்கிக்கொண்டிராவிட்டால் அப்படியே கீழே விழுந்திருப்பாள். அவள் உதடுகள் என் செவியில் உராய்ந்தன. காற்றின் அசைவைப் போல் அவள் வார்த்தைகள் சப்தமற்றுப் போயின. “நான் இரண்டு மாதங்களாய் ஸ்நானம் பண்ண வில்லை.” - நினைவு மங்கிய அவள் உடலை நான் தாங்கிக்கொண்டு நின்றேன். அவ்வலைஞன் என்னைப் பார்த்து மிரள மிரள விழித்துக்கொண்டு நின்றான். அவன் கையில் ஏந்திய தூண்டிலில் ஒரு நண்டு கழுவில் ஏற்றப் பெற்று, கால்களை உதைத்துக்கொண்டிருந்தது. எங்கள் மெளனத்தில் சமுத்திரம் பேரிரைச்சலாய் இருந்தது. அலைகள் எங்கள் கால்களைக் கழுவின. நான் வீடு திரும்பும் வேளையில் கையெழுத்து மறைந்து விட்டது. பூர்வா. வாசற்புறத்துத் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருந்தாள். நெற்றி மயிரில் இரண்டு பிரியும் மேலாக்கும் மாலைக் காற்றில் மெதுவாய் அசைந்தன. அவள் கண்கள் மூடியிருந்தன. சந்தடி செய்யாமல் அவள் பக்கத்தில் போய் பூர்வா என்று கூப்பிட்டேன். அவள் தூங்குகிறாளா, அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாளா என்று தெரியவில்லை. எங்களைச் சுற்றி ஒரே அமைதி. செடிகளிலும் மரங்களிலும் இலைகள் சலசலத்தன. நான் தாழ்வாரத்தின் சுவரின் மேல் அமர்ந்தேன். பூர்வா எனக்குப் புரிந்தபாடில்லை. இம்மாதிரி படுத்துக்கொண் டிருப்பதில் அவளுக்கு ரொம்பவும் விருப்பம். சோம்பேறியா?