பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ష్కీ 124 & லா. ச. ராமாமிருதம் ஆயின் அப்படியும் தோன்றவில்லை; ஏனெனில், ஒரு சமயம் நான் டைபாய்டு ஜுரத்தில் படுத்தேன். இருபத்தொரு நாட்கள் கண்கூடத் திறவாத கடுஞ்சுரம் என் நினைவு எனக்கு வந்ததும் என் ஞாபகத்தில் முதலில் உறைத்தது அவள் உருவமே. கவலையின் மிகுதியால் முடியக்கூட மறந்து அவிழ்ந்த கூந்தல் பிரிந்து கழுத்தின் இரு பக்கங்களிலும் சரிந்து என் மார்மேலே விழுந்திருந்தது. இரவும் பகலுமாய் தூக்கத்தில் மூடாத விழிகள். அன்ன ஆகாரம் மறந்ததால் சுண்டிப்போன முகத்தில் கண்கள் அளவினும் பெரியதாய் என்னை வெறித்தன. டாக்டர் என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார், அவளைச் சற்று அச்சத்துடனேயே பார்த்த வண்ணம். “ஸார், இந்தப் பூட்டுக்குப் பிழைத்துவிட்டீர்கள். ஆனால் இந்த அம்மா இல்லாவிட்டால் உங்களுக்கு என்ன நேர்ந் திருக்குமோ எனக்குத் தெரியாது. நீங்கள் தப்பர்த்தம் பண்ணக் கூடாது. உங்களைப் பெண்டாட்டியாய்க் கவனிக்கவில்லை; பிசாசாய்த்தான் கவனித்தார்கள். உங்களுக்கு மருந்து கொடுக்கு முன்னால் இந்த அம்மாளுக்கு உடல் தேற மருந்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். "பூர்வா, பூர்வா, பூர்வா!' நான் பாட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் ஒரொரு சமயம் அவளுக்குக் காதே கேட்காது. செவிடா? அதுவும் சொல்வதற்கில்லை. ஏனெனில் ஒரு இரவு என்னை அவள் அவசர அவசரமாகத் தட்டி எழுப்பினாள். “என்ன?’ என்றேன், தூக்கத்தில் கையைக் காலை முறித்துக்கொண்டு. என் கையை அவசரமாய் மடக்கினாள். “உங்கள் தலைமாட்டில் தேள்.” “சும்மா கனவு காணாதே. இந்த இருட்டில் நான் எங்கிருக் கிறேன் என்று என்னாலேயே கண்டுபிடிக்க முடியாதே!