பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வா * #25 உன்னால் முடியுமா, நீ தேளைக் கண்டுபிடிப்பதற்கு? இந்தா, சொல் பார்க்கலாம்- என் கையில் எத்தனை விரலை மடக்கிக் கொண்டிருக்கிறேன்?" என்று வேடிக்கை பண்ணினேன். “விளையாடாதீர்கள். விளக்கைப் போடுங்கள்.” விளக்கைப் போட்டேன். வாஸ்தவமாய் ஒரு சருகுத் தேள் கொடுக்கைப் பாய்ச்சிக்கொண்டு கொட்டத் தயாராய் நின்றது. அதன்மேல் ஒரு அடியைப் போட்டேன். 'எனக்குத் தெரிய வில்லையே” என்றேன், அவளை வியந்தவண்ணம். "அது விழுந்த சப்தம் கேட்டுத்தான் நான் எழுந்தேன்” என்று முனகிக் கொண்டு பூர்வா திரும்பிப் படுத்தாள். அவள் பேசிக்கொண் டிருக்கையிலேயே நித்திரை அவளை மருவ ஆரம்பித்துவிட்டது. "பூர்வா, அறுபது நாழிகையும் என்ன யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாய்? எந்தக் கவலையைப் பட்டுக்கொண்டிருக் கிறாய்?” ஆம், இவள் இவ்வளவு கவலைப்பட்டாற்போலிருப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? என்னைச் சுற்றிப் பார்க்கிறேன். எங்கும் அமைதியைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. அடையாறில் ஒரு மூலையில் எங்கள் வீடு. நாற்புறங்களும் மதிற் சுவர்கள். தோட்டத்தின் நடுவில் வீடு. வாசற்புறத்து அறைப்பக்கமாய் ஒரு மாதுளை மரம். முத்தமிட்டுச் சிவந்த உதடுகள் போலப் பழங்கள் செவசெவ என்று அடுக்கடுக்காய்த் தொங்குகின்றன. மரத்தடியில் ஒரு கல்மேடை எங்கள் தோட்டத்தில் எவ்வளவோ பூச்செடிகள் வைத்தும் மாலை வேளைகளிலோ, சில சமயம் காலை வேளைகளிலோ எதிர் பாராத சமயத்தில் மனத்தைத் திகைக்க அடிக்கும் ஒரு மணம் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும். தோட்டக்காரனைக் கேட்டால் சற்று நேரம் யோசித்துவிட்டுப் பக்கத்துக் காம்பவுண் டில் இருந்து வருகிறது என்பான். ஆனால் பக்கத்துக் காம்பவுண்டில் விசாரித்ததில், அம்மாதிரியான செடியோ, மரமோ அங்கே ஒன்றும் கிடையாது.