பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 & லா. ச. ராமாமிருதம் வீட்டின் பின்புறத்தில் அடையாறு அழுக்கற்று அமைதி யாய் ஒடுகிறது. நிலவில் அது பளிங்காய் மாறிவிடும். தூரத்தில் சமுத்திரத்தின் ஒசை, இரைச்சலற்று, இதமான பேச்சைப்போல் இழைகிறது. விட்டுள் என் அறையில் அலமாரிகளில், மனத்திற்கும், சமயத்திற்கும் ஏற்ற புத்தகங்கள் நிறைந்து சுவர்களை மறைக்கின்றன. சோபாவும், மெத்தை நாற்காலிகளும் மலிந்து கிடக்கின்றன. தரையை ஜமக்காளமும், புலித்தோலும், மான்தோலும் போர்த்துகின்றன. இவ்விடத்தில் விசனத்திற்கும் குருட்டு யோசனைகளுக்கும் எங்கே இடம்? x "பூர்வா, பூர்வா!' கேட்ட கேள்விக்கு பதில் வராது. என் கூப்பாட்டுக்கு அவளது அர்த்தமற்ற, அல்லது அர்த்தம் நிறைந்த, அல்லது அர்த்தம் புரியாத, ஆனால் கவர்ச்சி மிகுந்த புன்னகைதான் பதில். நான் இன்னமும் யோசிக்கிறேன்; நான் அவளை மணந்தேனா, அவள் புன்னகையை மணந்தேனா? முதன் முதலில் நான் அவளைச் சிந்திக்கையில். கான் விவகாரங்களையொட்டி அவள் பெற்றோர்கள் வசித்து வந்த கிராமத்திற்கு நான் போகும்படியிருந்தது. முன்பின் எங்கே என்ன என்று அநுபவமோ, பார்த்தோ இருந் திருந்தால்தானே? கிணற்றடியில் குடத்தை மடியில் வைத்துக் கொண்டு முழங்கையை மடியில் ஊன்றிக்கொண்டு மோவாய்க் கட்டையைக் கையில் தாங்கிய வண்ணம் தரையில் தட்டுத் தடுமாறி ஊறிச் செல்லும் வண்ணாத்திப்பூச்சியைப் பார்த்துக் கொண்டு பொருள் புரியாப் புன்னகையுடன் உட்கார்ந் திருந்தாள். எனக்கு நல்ல தாகம். நான் வாய் திறந்து கேட்கு முன்னர் வீட்டுள்ளிருந்து, பூர்வா! பூர்வா! என்ன பண்ணிண்