பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 & லா. ச. ராமாமிருதம் அடி தரித்திரத்தின் கொடுமையால் ஏற்படும் மனக்கசப்புடன், பொறுமையும் பிரியமும் அற்ற அக்கஷ்டத்தைப் பற்றி விஸ்தரிக்க அவளுக்கு இஷ்டமில்லை. “ஆயினும் எல்லாம் நிறைந்திருக்கும் இவ்விடத்தில் நீ ஏன் சந்தோஷமாய் இருக்கக் கூடாது? , , அவள் உதடு நகை அரும்பு கட்டியது. "நான் சந்தோஷமாய் இல்லை என்று நீங்கள் என்ன கண்டீர்கள்? சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” அவளுடைய அமைதி அமைதியல்லாது இயற்கையிலேயே அவளுக்குடைய பத்திர சுபாவம் என்று இப்பொழுது காண்கிறேன். அவள் பத்திரம் என் மனத்தின் நிம்மதியைக் குலைத்து எனக்கு விஸ்தரிக்கவொண்ணாத ஒரு மனச் சங்கடத்தை இயக்குகின்றது. எங்கள் சுபாவத்தின் மாறுபாட்டால், நாங்கள் அறியாமலே எங்களிருவரிடை எழும்பியிருக்கும் சுவரை நான் தகர்க்க முயன்றதில்லை. நான் அதில் முட்டிக் கொண்டதுதான் மிச்சம். நான் கலகல'வென்று ஒரு தோழியை வேண்டினேன்; கல்லை வேண்டவில்லை. ஆயினும் நான் அவள்மேல் வைத்து விட்ட பிரியத்திற்கு எல்லையில்லை. அப்பிரியத்தில் என் முழுமையை நான் இழந்துவிட்டேன். அவ்வெதும்பலிலேயே என் அகம் எரிந்தது. ஈடாக அவளுடைய அம்சத்தை நான் பெறாது என்னை நான் இழந்துகொண்டிருக்கும் சங்கடம் எனக்குத் தாங்க முடியவில்லை. இயற்கையாகவே என் உடலிலும் மனசிலும் என்னையும் மீறித் துடிக்கும் உத்வேகம் செலாவணியாவதற்கு இவள் என் வாழ்க்கையில் புகுமுன்னர் எத்தனையோ வழிகள் இருந்தன. இப்பொழுதோ 2