பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வா & 1.31 “ஹே, பூர்வா! உன் உடலில் ஒடுவது ரத்தமா அல்லது பானையிலிட்டுக் குளிர வைத்த பச்சை ஜலமா? திகைப்பில் அவள் விழிகள் மிரளுகையில் அவளுக்கு எப்படி அவ்வளவு அழகு கொடுக்கிறது? "நீங்கள் சொல்லுவது எனக்குப் புரியவில்லையே!” "வாஸ்தவம், நான் என்ன உளறுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.” பாலையில் கானலைக் கண்டு தவிப்பவன்போல் இருக்கிறது என் மனநிலை. ஒரு தடவை சமையலறையில் மாடப் புரையில் எதையோ தேடுகையில் அவளைத் தேள் கொட்டிவிட்டது. வலியினால் வாய்விட்டுக் கத்தமாட்டாளா! கொட்டிய இடத்தைக் கெட்டியாய் அழுத்திப் பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். நெறி தோளைக் குடைகிறது. நெற்றியில் வியர்வை முத்து முத்தாய் அரும்பு கிறது. துடிக்கும் வலியில் புருவங்கள் நெரிகின்றன. ஆயினும் வாயினின்று, "அம்மாடி பொறுக்க முடியவில்லையே!” என்ற ஒரு அரற்றல்கூடக் கிளம்பமாட்டேனென்கிறது. அவளை நான் என் தோளில் சாய்த்துக்கொள்கிறேனென்றாலும் என் ஆறுதலுக்குச் சாய்த்துக்கொள்கிறாளேயொழிய, அவள் வேதனைக்குத் தணிப்பாய் இருப்பதாகத் தெரியவில்லை. அவளுக்காக நான் தவிப்பது என் தவிப்பே; அவள் தவிப்பில் ஒரு பங்கு அல்ல. அவள்தான் எனக்குத் தன்னில் பங்கு தரமாட்டேனென்கிறாளே! இவள் மனித ஜன்மந்தானா, அல்லது மிருகமா!' என்றுகூட நான் வியப்புறுகிறேன். வேதனையை அவ்வளவு மெளனமாய் அவைகள்தாம் சகித்துக் கொள்ளும்.