பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 : லா. ச. ராமாமிருதம் ஆயினும் அவள் இப்பொழுது நெற்றியில் கூந்தலின் இரு பிரியும், மார்பின் மேல் மேலாக்கும் மாலைக் காற்றில் மெதுவாய் அசைய, மூடிய கண்களுடன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருக்கும் நிலையை நான் கவனிக்கையில், என்னையும் மீறி என் மனம் பரிதவிக்கிறது. பாவம், தன்னுடன் போகாது என் வித்தையும் தாங்கு கிறாள். ஏற்கெனவே சற்று நலிந்த உடல் இன்னும் நாளாக ஆக என்னவோ! என் மனத்தை அலசிப் பார்த்துக் கொள்கிறேன். நான் இன்னமும் சில நாட்களுக்குள் தந்தை யாவதைப் பற்றி எனது மனத்தில் சந்தோஷமா? பெருமிதமா? ஒரு தினுசில் சிறு அசடு தட்டுகிறது- ஏதோ ஏமாந்துபோன மாதிரி; ஆனால் மனத்தில் ஒரு நிம்மதியும் படுகிறது. அக்குழந்தையின் மூலம் அவளிடம் நான் எனது அம்சத்தில் ஒரு பங்காவது பெற்றுவிடுவேன் என்றே நினைக்கிறேன். பிறப்பது பெண்ணாய்ப் பிறந்தால் தேவலை, தன் தாயைவிட என்னிடம் இன்னும் கொஞ்சம் பட்சம் காட்டாதா? திடீரென்று அவள் குரல் என் சிந்தனையைக் கலைத்தது. "அந்த வலையன் கூடைக்குள் மீன் ரெண்டு இருந்ததா. மூணு இருந்ததா?” "இரண்டுதான் என்று நினைக்கிறேன். இப்பொழுதென்ன அதைப்பற்றி? "அந்தக் குடலைக்குள் அந்த ஜோடி எப்படித் தவித்தது பார்த்தேளா? எனக்குப் பார்க்கவே சகிக்கவில்லை.” “அதெல்லாம் பற்றி நினைத்துச் சங்கடப்பட்டுக்கொண் டிருக்காதே. மனசில் அதெல்லாம்-” “-அதோ பாருங்கள்” என்று மறுபடியும் அவள் குரல் குறுக்கே வெட்டிற்று. திகிலின் அதிர்ச்சி கண்ட குரல். எனக்கே புதிதாய் இருந்தது. ஆகாயத்தைச் சுட்டிக் காண்பித்துக்