பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வா • #35 நான் ஏதோ என் மனத்தில் தோன்றியதைச் சொல்லிக் கொண்டே போனேன். “அவனவன் பூர்வ ஜன்ம வினைக் கேற்ற ஜன்மமெடுக்கிறான்; மறைகிறான். அநேகமாய் ஒருவனுடைய இந்த ஜன்ம குணாதிசயங்களைக் கொண்டே, அவன் பூர்வ ஜன்மத்தில் என்னவாய் இருந்திருப்பான் என்று சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.” "அப்படியானால் நான் என்னவாய் இருந்திருப்பேன் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?” "நீ ஒரு கல்லாய் இருந்திருப்பாய் என்றுதான் எனக்குப் படுகிறது. யாராவது ஒரு மகான் இளைப்பாற உன் கல் ஜன்மத்தில் எப்பொழுதேனும் உட்கார்ந்திருக்கலாம்; அந்த ஸ்பரிச புண்ணியத்தினால் உனக்கு மானிட ஜன்மம் கிட்டி யிருக்கும். தெரியுமோயில்லையோ, அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!” எனது தர்க்க நுணுக்கத்தைக் கண்டு அவள் சிரித்தாள். "நீங்கள்?-” “நானா? என் அப்பா..” அவள் மிரள விழித்தாள். "புரியவில்லையா? நான் என் தாயின் கர்ப்பத்தில் இருக்கையிலே என் தகப்பனார் காலமாய்விட்டார். அது ஒரு அற்பாயுசு நிலை! ஆகையால் நான் பிறந்ததும் என் தந்தைதான் மறுபடியும் என் ரூபத்தில் ஜனித்திருப்பதாக என் தாயாருக்கு எல்லோரும் தேறுதல் சொன்னார்களாம். நானும் நடையுடை பாவனை எல்லாவற்றிலும் என் அப்பா மாதிரியே.” நான் என் பேச்சை முடிக்கவில்லை; வயிற்றைக் கலக்கும் தினுசில் ஒரு பெரும் இடி வீட்டின் மேலேயே விழுந்ததுபோல் மளமளவென நொறுங்கியது. "பூர்வா!” ஒரு தாவுத் தாவி அவளை அணைத்தேன். அவள் பயந்துகொள்ளாமல் இருக்க