பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 & லா. ச. ராமாமிருதம் வேண்டுமே! கர்ப்பிணி. அதையொட்டினாற்போலேயே, அதனினும் பெரிய இன்னொரு இடி. பளிரென்று சாட்டை போல் ஒரு மின்னல்! யுகத்தையொத்த ஒரு கணநேரம், நாங்கள் இருந்த அறை அதன் வெளிச்சத்தில் ஜ்வலித்து மறுபடியும் முன்னிலும் இருண்டது. அவள் உடல் வெடவெட வென்று உதறிற்று. அவளை நான் தட்டிக் கொடுத்தபோதிலும் என் தைரியம் அப்பொழுது சூன்யம்தான். "இடித்தது ஒண்ணா? ரெண்டா?” என்றாள். “எப்படியிருந்தால் என்ன?” “சும்மா கேட்டேன்.” 冰 * ※ கார்த்திகை "பூர்வா, நாளாகிறது. உன் வீட்டு மனுஷாள் யாரையாவது வரவழைக்கட்டுமா? அல்லது உனக்கு உன் பிறந்தகம் போக வேண்டுமென்றிருக்கிறதா?” “வேண்டவே வேண்டாம்!” அவள் மறுப்பில் ஒலித்த தீர்மானமும், கோபமும், பயமும் எனக்கு ஆச்சரியமாய் இருந்தன. ஆகையால் அத்துடன் அப்பேச்சையும் விடும்படி யாய்விட்டது. ஆயினும் அவளிடம் ஒரு சிறு மாறுதலை நான் இப்பொழுது கண்டேன். அவள் மெளனம் வெறும் மெளனமாய் இப்பொழுது இல்லை. அர்த்தமும் காரியமும் நிறைந்த மெளனம். இரண்டுபேர் ஒர் அறையில் ரகசியம் பேசிக்கொண்டிருந்தால், அதைச் சுவரில் காதை வைத்துக் கொண்டு வெளிப்புறமாக ஒட்டுக் கேட்பவனின் மெளனம்; நாடி பிடித்துப் பார்க்கும் வைத்தியனின் மெளனம். அவள் எதை அப்படி ஒட்டுக் கேட்கிறாள்? பூமாதேவிக்கு நாடி பிடித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாளா? இவள் கவலை