பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శి

137 夺 பூர்வா களைப் பட்டுப் பட்டு எனக்கு மண்டைகூட நரைத்துவிடும் போல் இருக்கிறது. ஒருநாள் நான்பாட்டுக்கு மெளனமாய் எதையோ படித்துக் கொண்டிருந்தேன். அவள் வழக்கம்போல் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், பெரிதாய்க்கொண்டே வரும் வயிற்றின் மேல் கையை வைத்துக்கொண்டு. “கொஞ்சம் சும்மாயிருங்கள்-” நான் விழித்தேன். "நான் சும்மாதானே இருக்கிறேன்.” “உங்களுக்கு ஒன்றும் கேட்கவில்லையா?” எனக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். "எலியா, பெருச்சாளியா? ஒன்றும் தெரியவில்லையே.” “என் வயிற்றுக்குள் குசுகுசுவென்று யாரோ பேசும் குரல் எனக்குக் கேட்கிறது.” "சீ அசடே!” "அசடுமில்லை; சமர்த்துமில்லை. நிஜமாய்த்தான்.” “என்ன பேசுகிறது? 'அம்மா பலூன் வாங்கிக் கொடேன் என்று குழந்தை இப்பவே கேட்கிறதா?” “உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தானா?” முதன்முதலில் என் மனத்தில் சிறு அச்சம் கண்டது. அவள் அருகில் சென்று தோள்மேல் கையைப் போட்டுக்கொண்டேன். "பூர்வா, இன்றைக்குச் சினிமாவுக்குப் போவோம். சார்லி சாப்ளின் படம். அவனைப் புரிந்துகொள்ள பாஷை தெரிய வேண்டியதில்லை.” “பேச்சை மாத்தாதீர்கள்ன்னா.” எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இந்தப் பாழும் மழை ஒயாதா! இன்னமும் இம்சையாய் ‘பிசுபிசுவென்று துறிக்கொண்டுதாணிருக்கிறது. இதனாலேயே