பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 * லா. ச. ராமாமிருதம் அர்த்தமற்ற கிலேசம் ஒன்று வண்டல்போல் மனத்தில் இறங்கி உறுத்துகிறது. அன்றிரவு படுக்கையில் முனகினாள். "என்ன பண்ணுகிறது பூர்வா?” 'வயிற்றைக் குமட்டுகிறது. சங்கடமாய் இருக்கிறது. வாந்தி வரும் போலிருக்கிறது. இதோ வருகிறேன்.” அவளுக்கு மறுக்கும் சப்தம் வெந்நீருள்ளிருந்து கேட்கிறது. என் பிரிவுத்தனத்தால் அவளுக்கு என்ன பிரயோஜனம்? நானும் தவிக்கிறேன். அவளும் தவிக்கிறாள். இந்நிலையில் நானும் தனியன், அவளும் தனியள்தான்; அவள் படும் கஷ்டத்தை நான் வாங்கிக்கொள்ள முடிகிறதா? அவளால் தான் கொடுக்க முடிகிறதா? இப்படியேதான் சந்ததி உண்டாகிறது; மடிகிறது. பார்க்கப் போனால் யாரால் யாருக்கு என்ன பயன்? 来 ※ 求 மார்கழி இரவு, தூக்கம் அவளுக்கும் கெட்டுவிட்டது; எனக்கும் கெட்டுவிட்டது. ஒரு பெரும் அசதிதான் கண்ட மிச்சம். டாக்டரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் ஒன்றும் கோளாறாய்த் தெரியவில்லை. அவளுக்கு வயிற்றில் இம்சை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஏழு மாதங்களிலேயே வயிறு நிறைந்து இறங்கிவிட்டது. அடிக்கடி ஒரு பெருமூச்சு. ஒரு இறைப்பு. ஒரு உயிர் இன்னொரு உயிரைத் தாங்கிக் கொண்டிருப்ப தென்றால் இலேசாய் இருக்கிறதா? “என் வயிற்றில் நான் எப்பொழுதும் ஒரு குரலக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரே குரலாய் இல்லை. வெவ்வேறு குரலாய் இருக்கிறது. சுவாமி எந்த ஜன்மாவை என் வயிற்றுக்குள் வைக்கலாம் என்று இன்னும் ஒவ்