பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 & லா. ச. ராமாமிருதம் “வேளை வந்துவிட்டதென்று நினைக்கிறேன். இடுப்பை அப்படி வலிக்கிறது.” அவள் குரல் கூடியவரையில் அமைதியாய் இருந்த போதிலும் எவ்வளவு தூரம் அவள் அடக்கிக்கொண்டிருக் கிறாள் என்று அதன் அமைதியிலும் ஒருவாறு புரிந்தது. புரிந்த அளவுகூட மனம் சகிக்க முடியவில்லை. காரை ஷெட்டி லிருந்து எடுப்பதற்கு, இதுவரையில் எனக்கு ஆகும் நேரத்தில் பாதி நேரம்தான் ஆகியிருக்கலாம். ஆயினும் இவ்வளவு நேரமாய் எனக்கு எப்பொழுதும் பட்டதில்லை. வண்டியை முழுவேகத்தில்தான் ஒட்டுகிறேன். ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் மூன்று மைல்தான். ஆயினும், இந்த மூன்று மைல் தூரத்திற்கு முழுவேகத்தில் இப்பொழு தாகும் நேரத்தைவிட, இன்னமும் சுருக்கில், இதைவிடக் குறைந்த வேகத்தில், முந்நூறு மைல் துரத்தை நான் கடந்திருக் அவள் என் பக்கத்தில்தான் உட்கார்ந்திருக்கிறாள். என்மேல் சாய்ந்துகொண்டிருக்கிறாள். சத்தம் வெளிப்படாத வண்ணம் கீழுதட்டை அவள் பற்கள் இறுகக் கடித்து அழுத்திக்கொண்டிருக்கின்றன. அவள் சரீரம் எவ்வளவு மிருதுவாய் இருக்கிறது. என் வண்டி பறக்கிறது; வண்டியின் பின் அதன் தோகை போலும் ஒரு புழுதி மேகம் அதைத் துரத்துகிறது. இந்நள்ளிரவில் நடுநிலவில் அடையாறு ஒரே வெள்ளித் தகடாய்ப் பிரகாசிக்கிறது. இந்தக் கஷ்டத்திலும் மனத்தில் இவ்வழகு பதியாமலில்லை. நாளைக்குக் குற்றாலம் போவதாய் இருந்தோம். இப்பொழுது குற்றாலம் எவ்வளவோ தூரம் எட்டப் போய் விட்டது. குத்தாலமும் வேண்டாம்; எத்தாலமும் வேண்டாம்: வயிற்றை விட்டுக் கனம் கழிந்தால் சரி.