பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 & லா. ச. ராமாமிருதம் படியில் உட்காருகிறேன். காது கேட்கவொண்ணாத பேச்சுக் களும் கலவரமும் உள்ளே நடக்கின்றன. ஒரு வார்த்தை மாத்திரம் சம்மட்டி அடித்தாற்போல் உள்ளிருந்து வெளியே கேட்கிறது. "ஹெமர்ரேஜ்! அப்புறம் என்ன என்று எனக்கு நினைவில்லை. எனக்கு நினைவு வந்த சமயத்தில் டாக்டர் என்னைத் தோளைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டிருந்தார். "தைரியமாயிருங்கோ, ஸார்- நாங்கள் ஒன்றும் செய்வதற் கில்லை. ஹோப்லஸ் கேஸ், இரட்டைக் குழந்தை- ஆணும் பெண்ணுமாய் வயிற்றிலேயே செத்துப்போய் விட்டன. ஆயுதம் போட்டுப் பிரயோஜனமில்லை- ஹோப்லஸ் கேஸ்-” நான் ஒன்றும் பேசவில்லை. பேச என்ன இருக்கிறது? எனக்கு அழுகைகூட வரவில்லை. என் கண்கள் காரில் சுருட்டிப் போட்டிருக்கும் அவள் புடைவையை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தன. வெங்காயக் கலர்ப் புடைவை; ஒரத்தில் சிவப்பு பார்டர்; அவள் கலியாணத்திற்கு வாங்கின புடைவை. கீழ்த்திசை வெளுக்க ஆரம்பித்துவிட்டது. பூர்வாவின் கதையும் முடிந்தது. O