பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 : லா. ச. ராமாமிருதம் நாசமும் நசிப்பும் தவிர, வேறு எதுவும் அறியமாட்டா, ஆகையால், அவைகள் அவனை அழிக்க ஆரம்பித்துவிட்டன. - ஆனால், அதற்குள் சாலையில் நடமாட்டம் ஏற்பட்டது. முதலில் ஒருவன் வந்து பார்த்துவிட்டு உளறியடித்துக் கொண்டு ஒடி ஒன்பது பேரைக் கூட்டி வந்தான். எல்லாரும் அவனைச் சுற்றி நின்று அவன் இறந்த மர்மத்தை அறிய முயன்றார்கள். ஆயினும் அங்கேயுள்ள புல்லும் பூண்டும், புள்ளினங்களும் தவிர வேறு யார் அதை விளக்க முடியும்? பிறகு, அந்தப் பிணத்தைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். இடம் மறுபடியும் வெறிச்சென்று போயிற்று. கேலியில் நகைப்பதுபோல், பட்சிகள் க்றீச்'சிட்டன. இலைகள் ஒசையிட்டன. ஆனாலும், இளங்காற்று அந்த மாமரத்தை ஊடுருவுகையில், அதனின்று ஒரு பெருமூச்சு கிளம்பியது. மற்ற ஓசை எல்லாம் அச்சங்கண்டு அடங்கியது. ஏனென்றால், அந்த மனிதன் இறந்த உண்மையான காரணத்தை அந்த மரம்தான் அறியும். பிறப்பு அந்த மாமரத்தில்தான் எத்தனை கிளைகள், எத்தனை இலைகள், எத்தனை காய்கள்! அம் மா பெரிய அம்மா’தான். பெருங்கிளைகள் அதன் குழந்தைகள். சிறு கிளைகளும் கிளையின் கிளைகளும் இலைகளும், பெரிய பேரன், சின்னப் பேரன், கொள்ளுப் பேரன்மார்களாகும். காய்களும், கனிகளும், பெண்களும், பெரிய பேத்திகளும், சின்னப் பேத்திகளும், கொள்ளுப் பேத்திகளுமாகும். அது வாழ்க்கையில் மிகவும் அடிபட்டிருக்கிறது. இது வரையில் எத்தனைபேர் எத்தனை கிளைகளை வெட்டிக் கொண்டு போயிருப்பார்கள்! உடலையே சீவுவதுபோல், அதன் பட்டையை உரித்துக்கொண்டு போயிருப்பார்கள்! எத்தனை