பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹாபலி శ - "4? எதனால்? பின்னும் ஒரு நாள், மரத்தடியில் உச்சி வேளையில், இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று யோகியின் யோக தண்டம் போல் பின்னிக்கொண்டு, தலையை மாத்திரம் எதிரெதிரே நிமிர்த்திக்கொண்டு, கண்களில் பச்சைக் குரூரம் கொதிக்க ஒன்றையொன்று ஒறுத்து நோக்கின. ஏனோ? திடீரென்று இன்னதென்று புரியாமல் எள்ளளவும் சகிக்க இயலாத ஒரு வேதனை அவளைத் தாக்கியது. அதன் வேகத்தில் அவள் உடலே குலுங்கியது. உயிரே போய்விடும் போலிருந்தது; ஆனால் போகவில்லை. உள் உறுத்தல் மாத்திரம் தாங்க முடிய வில்லை. இதுவரை பத்திரமாயிருந்துவிட்டு, இப்போது ஏதோ காலைவாரி விட்டாற்போலிருந்தது. இருந்த இடத்திலிருந்து, மரத்தின் ஆணிவேராகிய தன் பாட்டிக்குத் தந்தியனுப்பி னாள்- பேசுவது வேறு பாஷையானாலும், மனிதனிலிருந்து மரம் வரை மனத்தின் பாஷை ஒன்றுதானே! "மகளே! உனக்கு வேளை நெருங்கிவிட்டது. நான் என்ன செய்வேன்! உன் நாளை எண்ண வேண்டியதுதான். உன் பலிக்கு உகந்த பாத்திரம் வருவது உன் அதிருஷ்டம்” என்ற நம்பிக்கையற்ற சேதியைப் பாட்டி பதிலாயனுப்பினாள். ஆகையால், தான் பலியாகும் நாளில் தன் வேதனை தீர்ந்துவிடும் என்று அந்தக் கனி நம்பிச் சகித்துக்கொண்டு காத்திருந்தாள். பலி சிறு மேகங்கள் பருதியை விழுங்கின. பெரு மேகங்கள் சிறு மேகங்களை விழுங்கின. வானம் ஒரு சமயம் எல்லா மேகங்களையும் சிதற அடித்துவிட்டு, நடுவெயிலில் தன் முழு நீலத்தை மின்னிக்கொண்டிருந்தது.