பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹாபலி * i49 சூழ்ந்த மகத்தான விபத்தில் மூழ்கி அதற்கு மூர்ச்சையே போட்டுவிடும் போலிருந்தது. இதுதான் அந்தியென்று அது அறிந்தது என்றாலும், இந்த அந்தியேதான், அது பிறந்து வாழ்ந்து காத்திருந்த பலன் என்றும் கண்டது. இந்தப் பலனேதான் அதன் பயன் இந்தப் பயனேதான் அதன் பதவியும். மாங்கனியின் மார்ப் பக்கத்தில், கிளியின் மூக்கு அரிவாள் போல் விழுந்து கிழித்தது. சாறும் சதையும், ரத்தமும் ஊன்நீரும் போல் அதன் உடலெல்லாம் வழிந்தது. அதன் இதயத்தையே தேடித் தோண்டுவதுபோல, அந்தக் கனியைக் கிளி குடைந் தெடுத்தது. மரணாவஸ்தையில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக் கையிலேயே, அதன் சத்தை அதன் காலன் உறிஞ்சிக்கொண் டிருக்கையிலேயே, அதன் உள்ளமாகிய கொட்டையின் முகடு வெளிவருவதை அந்தக் கனி கண்டது. அந்தக் கொட்டையி னின்று ஒரு வண்டு மிரண்டு ஓடியது. அதன் உள்ளத்தைக் குடைந்தெடுத்த பூச்சி அதுதான். அந்தக் கணத்திலேயே கனியின் ஆவி பிரிந்து போயிற்று. அதன் சவம் கிளையினின்று நழுவித் தரையில் விழுந்தது. தனக்குப் பலியாகி விடுவதற்கென்றே காத்திருந்த பழத்தை அநுபவித்த பிறகு, கிளி மரத்தினின்றும் பறந்து சென்று வானில் புள்ளியாய் மறைந்து போயிற்று. ఉ சாலையோரத்தில் மாமரத்தடியில் நடந்து வந்த மனிதன் குளக்கரையில் தோல் சறுக்கி விழுந்து மாரடைப்பில் இறந்தான். அவன் இறந்த மர்மம் இதுதான். Q