பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுக்கள் + 15? அம்மா முகத்தில் புன்னகையரும்பிற்று. “நல்ல நாளும் கிழமையுமா இன்னிக்காவது உடம்பைப் பத்திப் பேசாமல் இருங்களேன். சந்தோஷமாயிருப்போம்.” அப்பாவுக்குத் தன்னுடம்பைப் பற்றி நினைப்பதிலும் பேசுவதிலும்தான் சந்தோஷம். ஏதாவது மருந்து சாப்பிட்ட வண்ணமிருப்பார். கண்ணாடியண்டை போய் கண்ணை இழுத்து இழுத்துப் பார்த்துக் கொள்வார். பக்கத்தில் நாங்கள் யாராவது இருந்தால், எங்கள் கண்ணையும் இழுத்துப் பார்த்துவிட்டுக் கசப்புடன் உதட்டைப் பிதுக்கிக்கொள்வார். 'ஊ-ஹாம்! பிரயோசனமில்லை! வியாதியஸ்தனுக்குப் பிறந்தது வஸ்தாதாய்ப் பிறந்துவிடுமா? என்று தன்னையே கேட்டுக்கொள்வார். வியாதியைக் கொண்டாடுவதிலேயே அவருக்கு ஒரு சந்தோஷம். அத்தனைக்கத்தனை அம்மா அவருக்கு எதிரிடை எதையுமே கொஞ்சமாய்ப் பண்ணவும் தெரியாது; கொஞ்ச மாய்க் கொடுக்கவும் தெரியாது; சும்மாயிருக்கவும் தெரியாது. தோட்டத்தில் ஏதாவது கொத்திக் கிளறி, நட்டு, வளர்த்துப் பறித்துக்கொண்டிருப்பாள். இத்தனை நாளாயும் இப்பொழுது நினைக்கையிலும் என் அம்மாவின் தோட்டம் என் கண்முன் எழுகிறது. ஒரு மூலையில் ரோஜா- அப்பொழுதுதான் பதியம் போட்டது. அதை யொட்டினாற்போல் மல்லிகைச் செடி கொஞ்சம் எட்டி, தோட்டத்துச் சுவரை யொட்டினாற்போல் மாட்டுக் கொட்டில். அதில் 'கல்யாணியென்று நாங்கள் ஆசையாய்ப் பேர் வைத்து அழைக்கும் எங்கள் பசு. சுத்த வெள்ளை. வலது தொடையில் மாத்திரம் உள்ளங்கை அகலத்துக்கு அழகாய் ஒரு கறுப்புத் திட்டு. அதற்கு எட்டியும் எட்டாத துரத்தில் முளையில் புத்தம் புதிதாய்க் காளைக் கன்றுக்குட்டி அதற்கு என்ன பேர் வைப்ப தென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரே துடி! துள்ளல்!