பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 بس۔ ! ?

கணுக்கள் శ్య #53 “சரிதாண்டா, போ!'- அம்பியின் அவசரமான அழைப்பைக்கூடச் சட்டை செய்யாமல், அம்மா அப்பாவுக்குத் தைரியம் கூறுவதில் முனைந்திருந்தாள். “நல்ல நாளும் கிழமையுமாப் பழசெல்லாம் வேண்டாம். ஒங்க மருந்து சீசாக்களுக்கும் பவுடர் பொட்டலங்களுக்கும் ஒரே முழுக்குப் போட்டுடுங்கோ. உடம்புக்கு ஒண்ணுமே யில்லேன்னு நெனச்சுண்டு வளைய வாங்கோ. ஒண்ணுமே யிருக்-” . "அம்மா, இதெப் பாரேண்டி- பொள்ளங்கா" "புடலங்காயாவது! காலமில்லாக் காலத்திலே-” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே அம்மா திரும்பினாள். அம்பி சிரித்துக்கொண்டே சுட்டிக் காண்பித்தான். அவன் கைக்கு ஒரு சாண் எட்ட நீளமாய்ச் சுண்டுவிரல் பருமனுக்கு ஒரு புடலங்காய் தொங்கிற்று. பச்சைப் பசேலென்று அம்பி பக்கமாய் வளைந்து, நிமிர்ந்து முறுக்கிக் கொண்டு நெளிந்தது. அம்மாவிடமிருந்து ஏதோ ஒரு வினோதமான சப்தம் கிளம்பி, அவள் மூச்சு கேவிக்கொண்டே போயிற்று. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அம்மா மூஞ்சியும் அதிலே சுழலும் கண்ணும் பயமாயிருந்தன. - இன்னமும் அந்தத் தோற்றத்தை என்னால் மறக்க முடியவில்லை. நான் மனம் சஞ்சலித்திருக்கையிலோ, குடும்பத்தில் ஏதேனும் அசம்பவம் நேரவிருக்கையிலோ, முன் அறிகுறியாக அம்மா என் கனவில், நாங்கள் அன்று அவளைக் கண்ட கோலத்தில் தோன்றிவிடுகிறாள். இருகைகளும் அடைத்த வாயும், வெளுத்த முகத்தில் பயங்கரத்தில் சுழலும் விழிகளும், மடிபிதுங்க அவரைக்காயுமாய் நிற்கிறாள். “என்னம்மா, என்னம்மா?” என்று நானும் பாப்பாவும் ஒன்றும் புரியாமல், கூடச்சேர்ந்து கத்துகிறோம். அப்பா, உஷ்'